tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

நீலகிரி, மே 24

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 64-வது பழக்காட்சியினை கலெக்டர் அருணா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர்கள் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:

இந்தியாவின் தலைசிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் ஆண்டுதோறும் தோட்டக்கலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வருடம் தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் நடப்பில் உள்ளதால் அரசு தாவரவியல் பூங்காவில் மலர் காட்சி, அரசு ரோஜா பூங்காவில் ரோஜா காட்சி மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சி நடத்த முடிவெக்கப்பட்டு, கடந்த 10 ஆம் தேதி மலர் காட்சி மற்றும் ரோஜா காட்சி துவக்கி வைக்கப்பட்டது.

மலர் நாற்றுகள்விநியோகம்

இதனை தொடர்ந்து 64வது பழக்காட்சி தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் பழக்காட்சிக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளுக்கு மலர் நாற்றுக்கள் வழங்கப்படவுள்ளது.

இப்பழக்காட்சியானது 24.5.2024 துவங்கி 26.5.2024 வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

15 அடி உயரத்தில் கிங்காங்

இக்கண்காட்சியில் சுமார் 5.50 டன் பழங்களை கொண்டு பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சமாக சுமார் 1.75 டன் கருப்பு திராட்சை பழங்களை கொண்டு கிங் காங் உருவம் 6 அடி அகலம் 15 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது நாம் உண்ணும் உணவுகளில் உள்ள ரசாயன நச்சுப் பொருட்களை குறைத்து, உலகில் வாழும் அனைத்து உயிரினங்களை காப்பாற்ற உறுதுணையாக இருக்கும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு " GO ORGANIC" "SAVE EARTH" " போன்ற வாசகங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சிம்ஸ் பூங்கா 150 ஆண்டு

சிம்ஸ் பூங்கா உருவாக்கப்பட்டு 150 வருடங்கள் ஆனதை கொண்டாடும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் பல்வேறு வகையான 150 ரக பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுவர்களை கவரும் வகையில், கார்ட்டுன் உருவங்களான டம்பெல் டக், மினியன், டைனோசர், பிக்காச்சு, நத்தை போன்ற உருவங்கள் சுமார் 1.50 டன் எலுமிச்சை, திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, செர்ரி மற்றும் பேரிச்சை பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களின் பழங்களின் வளங்களை பறைசாற்றும் விதமாக பல்வேறு காட்சி திடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் - புஜ்ஜி, தஞ்சாவூர் -தலையாட்டி பொம்மை, கன்னியாகுமரி -தேனீ, நாமக்கல் மாவட்டம் -டிராகன், கரூர் - அன்ன பறவை, கடலூர் -கலங்கரை விளக்கம், மதுரை மாவட்டம் - மரவன் பட்டாம்பூச்சி, திருச்சி -பாண்டா, பெரம்பலூர் மாவட்டம் - இந்தியா கேட் மற்றும் கோவை மாவட்டம் - ஒட்டகம் போன்ற உருவங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகைபுரிந்து, இப்பழக் காட்சியினை கண்டுகளிக்க வேண்டும் என கலெக்டர் அருணா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக கலெக்டர் அருணா, குன்னூர் எம்ஆர்சி பேண்ட் குழுவினரின் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்கள் அப்ரோஸ் பேகம், நாகராஜன், குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம், குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் உட்பட தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க