tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

கோவை, நவ. 10–

தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், குறு,சிறு நடுத்தர தொழில் துறை சார்பில், ரூ.2,993 கோடி வங்கிக் கடன் வழங்கி, 33 ஆயிரத்து 464 இளைஞர்களை தொழில்முனைவோராக்கி, வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளோம்,” என, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

கோவை கொடிசியா வளாகத்தில் , குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்கேற்ற, ‘வாங்குவோர் விற்போர் சந்திப்பு’ நிகழ்ச்சி நடந்தது. இதில், 15 நாடுகளைச் சேர்ந்த 28 கொள்முதலாளர்கள், 231 எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், 43 எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் 115 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை மேற்கொண்டன.

இதுதொடர்பாக, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 

எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க 6 மாத இடைவெளியில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு நடத்தப்படும் என, சட்டசபையில் அறிவித்திருந்தோம். சென்னையில் நடந்த முதல் சந்திப்பில் ரூ.46 கோடிக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. கோவையில் தற்போது நடந்த சந்திப்பில், ரூ.115 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 17 முதன்முறை ஏற்றுமதியாளர்கள் ரூ.1.68 கோடி மதிப்பில் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளனர்.

தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், எம்.எஸ்.எம்.இ., துறை சார்பில் 5 சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, ரூ.1,104 கோடி மானியத்தில், ரூ.2,993 கோடி வங்கிக்கடன் அளித்து, 33 ஆயிரத்து 464 இளைஞர்களை தொழில்முனைவோராக்கியுள்ளோம்.

 

சேலம், சத்தி, கிருஷ்ணகிரி, ஓசூர், மதுரை, கோவையில் குறிச்சி உள்ளிட்ட இடங்களில் ரூ.208 கோடி மதிப்பில், 541 குறுந் தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய அடுக்குமாடித் தொழில் வளாகம் கட்டும் பணி நடக்கிறது.

 

புலம் பெயர் தொழிலாளர்களுக்காக, அம்பத்தூரில் 810 தொழிலாளர்கள் தங்க, ரூ.24.4 கோடியில் விடுதி கட்டப்படுகிறது. கோவை, குறிச்சியில், ரூ22 கோடி மதிப்பில் 510 தொழிலாளர்கள் தங்க, விடுதி கட்டும் பணி நடக்கிறது.

தென்னை நார் தொழிலை ஊக்குவிக்க, தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டுக் கழகம் துவக்கப்பட்டுள்ளது. தென்னை நார்த் தொழில், ரூ.2,156 கோடி ஏற்றுமதி உட்பட ஆண்டுக்கு ரூ, 5,361 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது.

 

பேராவூரணி, கே.பரமத்தி, குண்டடம், உடுமலை, பொள்ளாச்சி கயிறு குழுமங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. தென்னை நார்பொருட்களின் தரத்தைப் பரிசோதிக்க ரூ.4 மதிப்பில் ஆய்வகம் அமைக்கப்படுகிறது.

மின்கட்டணம்

‘பீக் ஹவர்’ மின்கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் வரை, பீக் ஹவர் கட்டணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நெட்வொர்க் கட்டணமும் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக, மின்வாரியத்துக்கு அரசு கடந்த ஆண்டு ரூ.330 கோடியும், நடப்பாண்டு ரூ.351 கோடியும் வழங்கியுள்ளது. 12 கிலோவாட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 3ஏ1 கட்டண விகிதத்துக்கு மாற்றுவது குறித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

தமிழக அரசின் முதலீட்டு மானியம் தாமதம் செய்யப்படுவதில்லை. சமச்சீரான தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்க, சிறு மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி வழங்கப்படுகிறது. இதுவரை வழங்காத பகுதிகளுக்கு உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சோலார் அமைக்க முதலீட்டு மானியம் கோரியுள்ளனர். பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவையில் தங்க நகை தொழிற்பூங்காவில், மத்திய அரசின் ஆய்வகத்தையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில்துறை கூடுதல் கமிஷனர் சவுந்தரவல்லி, இணை கமிஷனர் நிர்மல்ராஜ், கலெக்டர் கிராந்திகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

+++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க