tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஆக. 26–

பிரதமர் மோடியின் 113வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

 அசாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தின் பாரேகுரி கிராமத்தில் வசித்து வரும் மோரன் சமூகத்தினர், ஹூலாக் கிம்பன் குரங்குகளுடன் ஆழமான பிணைப்பினைக் கொண்டுள்ளனர். 

அந்த வகைக் குரங்குகள், வாழைப்பழங்களை விரும்பி சாப்பிடும். இதையடுத்து, கிராமத்தினர் தங்களின் வயல்களில் வாழை மரங்களை பயிரிடத் தொடங்கினர். கிராம மக்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு செய்ததைப் போல கிம்மன்ஸ்களுக்கும் பிறப்பு இறப்பு தொடர்பான சடங்குகளைச் செய்ய முடிவு செய்துள்ளனர். 

அதேபோல் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், கொம்புகள் மற்றும் பற்களுக்காக வனவிலங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்க. 3-டி தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். 

மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவாவில், துப்புரவுப் பணியாள சகோதர சகோதரிகள் கழிவுப் பொருட்களிலிருந்து செல்வம் ஈட்டுதல் என்ற விஷயத்தை உண்மையாக்கி உள்ளனர். இந்தப் பணிக்காக அக்கம்பக்கத்திலிருந்து நெகிழிக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள், டயர்கள், குழாய்கள் ஆகியவற்றைத் திரட்டியிருக்கிறார்கள். இந்தக் கலைப்படைப்புக்களில் ஹெலிகாப்டர்கள், கார்கள், பீரங்கிகள் போன்றவை அடங்கும்.  

கடந்த 19ம் தேதி, ரக் ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடினோம். அதே நாளில் உலக சம்ஸ்கிருத தினமும் கொண்டாடப்பட்டது. இன்றும் கூட நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி, சமஸ்கிருதத்தின்பால், மக்களுக்கு சிறப்பான ஈர்ப்பு தென்படுகிறது. உலகின் பல நாடுகளில் சமஸ்கிருதம் தொடர்பாக பல வகையான ஆய்வுகளும், சோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன.

லிதுவேனியாவில் பேராசிரியர் வைடிஸ் விதுனாஸ் ஒரு தனித்துவமான முயற்சியில் இறங்கியுள்ளார். அதற்கு அவர், 'நதிகளில் சமஸ்கிருதம்' என்று பெயரிட்டுள்ளார். நேரிஸ் நதியில் ஒருசில குழுவாக கூடி, அதன் கரைகளில் வேதங்கள் மற்றும் கீதையை பாராயணம் செய்கின்றனர். 

குழந்தைகளின் ஆரோக்கியத்தை பொறுத்தே குடும்பம், சமூகம், நாட்டின் எதிர்காலம் உள்ளது. அவர்களின் ஆரோக்கியத்துக்காக குழந்தைகள் தொடர்ந்து ஊட்டச்சத்தினைப் பெறுவது அவசியம். குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு, நாடு முன்னுரிமை அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் செப். 1 -– 30 வரை ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது. 

இன்னும் சில நாட்களில் பாரா ஒலிம்பிக் பாரிஸில் தொடங்க இருக்கிறது. நாட்டின் சார்பில் கலந்து கொள்ளும் வீரர்களை 140 கோடி இந்தியர்களும் உற்சாகப்படுத்த வேண்டும். 

மேலும், வர இருக்கும் விழாக்களான ஜென்மாஷ்டமி, விநாயக சதூர்த்தி, ஓணம், மிலாது நபி பண்டிகைகளுக்காக, உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.  

ஆக.29ல் தெலுங்கு மொழி தினம் கொண்டாடப்பட உள்ளது. தெலுங்கு பேசுவோர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். 

இவ்வாறு பிரதமர் பேசினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க