tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புது­டெல்­லி, மே ௧௭–

ஊழல் வழக்கில் கெஜ்­ரி­வா­லுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்­கால ஜாமீன் வழங்­கி­ய­து, தனி சலு­கை­யாகும் என்று மத்­திய உள்­துறை அமைச்சர் அமித்ஷா விமர்­சித்­துள்ளார்.

 டெல்லி மது­பான கொள்கை முறை­கேடு வழக்கில் ரூ.100 கோடி லஞ்ச புகாரின் அடிப்­ப­டையில் முதல்வர் கெஜ்­ரி­வாலை அம­லாக்­கத்­து­றை கைது செய்­தது. திகார் சிறையில் இருந்த அவ­ருக்கு கடந்த பத்தாம் தேதி இடைக்­கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்­த­ர­விட்­டது. இதை­ய­டுத்து டெல்லி மற்­றும் பஞ்­சாபில் கெஜ்­ரிவால் பிர­சாரம் செய்து வரு­கி­றார். மத்­திய அரசை கடு­மையாக விமர்­சித்து பேசு­கிறார்.

 இந்த நிலையில் மத்­திய உள்­துறை அமைச்சர் அமித்ஷா அளித்தபேட்டி ஒன்­றில், கெஜ்­ரி­வா­லுக்கு இடைக்­கால ஜாமீன் வழங்­கி­யதை விமர்­சித்­தி­ருக்­கிறார். கெஜ்­ரி­வா­லுக்கு இடைக்­கால ஜாமீன் வழங்­கி­யது தனி சலு­கை­யா­கத்தான் பார்க்­கிறேன். இது வழக்­க­மான தீர்ப்பு அல்ல என்றே நம்­பு­கிறேன். சிறப்பு சலுகை அளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத்தான் நாட்டில் பெரும்­பான்­மை­யான மக்கள் கூறு­கின்­ற­னர். இந்த தேர்­தலில் இண்­டியா கூட்­டணி வெற்றி பெற்­றால், தான் சிறைக்கு செல்ல தேவை­யி­ருக்­காது என்­று கெஜ்­ரிவால் கூறி­யி­­ருப்­பது கோர்ட் அவ­ம­திப்­பா­கவே கரு­து­கி­றேன்.சிலர் வெற்றி பெற்­றால், குற்றம் செய்தி­ருந்தால் கூட தன்னை சுப்­ரீம்கோர்ட் சிறைக்கு அனுப்­பா­து என்று அவர் சொல்ல முயற்­சிக்­கிறார். தாங்கள் வழங்­கிய தீர்ப்பு எப்­படி எல்லாம் தவ­றாக பயப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்­பதை தீர்ப்­ப­ளித்த நீதி­ப­திகள் சிந்­தித்துப் பார்க்­க­வேண்­டும்.

 திகார் சிறையில் தான் அடைக்­கப்­பட்­டி­ருந்த அறையில் ரக­சிய காமி­ராக்­களை நிறுவி பா.ஜ. அரசு கண்­கா­ணித்­த­தாக கெஜ்­ரிவால் கூறு­கிறார். திகார் சிறை டெல்லி அரசின் நிர்­வா­கத்தில் வரு­கி­றது. டெல்லி சிறைத்­து­றையின் செயல்­பாட்டில் மத்­திய உள்­து­றை தலை­யி­டா­து.

இவ்­வாறு அமித்ஷா கூறினார்.

++++++++++++++++++++++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க