tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருவனந்தபுரம், செப். 1–

கேரளாவுக்கு ஐந்தாண்டுகளில் எய்ம்ஸ் வரவில்லை என்றால் அரசியலுக்கே முழுக்கு போடுவேன் என்று மத்தியஅமைச்சர் சுரேஷ் கோபி அறிவித்துள்ளார்.

 கேரளாவில் இருந்து பா.ஜ.வுக்கு கிடைத்த ஒரே எம்.பி. நடிகர் சுரேஷ் கோபி. அவர் மத்திய அமைச்சராகி உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் கேரளாவுக்கு எய்ம்ஸ் வருவது பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது அந்த மாநிலத்தில் சர்ச்சை ஆகி உள்ளது.இந்த நிலையில் நேற்றுதிருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் சுரேஷ் கோபி இது பற்றி குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:

  கேரளாவில் பொருத்தமான இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படும். இதற்கான எல்லா தேவைகளையும் திருப்திகரமாக மாநில அரசு பூர்த்தி செய்ய முன்வரவேண்டும். இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் கேரளாவில் எய்ம்ஸ் வந்து விடும். அப்படி வரவில்லை என்றால் அரசியலை விட்டே நான் போய் விடுகிறேன்.

 கேரள அரசு கோழிக்கோட்டில் எய்ம்ஸ் அமைக்க முன்னுரிமை அளிக்கிறது. ஆனால் கேரளாவின் மத்திய பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். எய்ம்ஸ் வரும் பட்சத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கவேண்டும். கோட்டயம், இடுக்கி முதல் தமிழ்நாட்டின் கம்பம்,தேனி, மதுரை மக்களுக்கும் அது பயன்படும். சர்வதேச அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் மத்தியஅரசு பல திட்டங்களை பரிசீலித்து வருகிறது. நம்பர் ஒன் சுற்றுலா பூமியாக கேரளா மாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

box

'ஊடகங்கள் சொல்வது மக்களின் குரல் அல்ல'

திருவனந்தபுரம் நிகழ்வில் கலந்துரையாடலில் ஊடகங்களை விமர்சித்தார் மத்தியஅமைச்சர் சுரேஷ் கோபி. அவர் கூறுகையில், "எனக்கு எதிராக அநியாயமாக யார் குரல் எழுப்பினாலும் எனக்கு கோபம் வரத்தான் செய்யும். குற்றச்சாட்டுக்கள் நியாயமானதாக இருக்கவேண்டும். கேட்கிற கேள்விகளும் நியாயமானதாக இருக்கவேண்டும். யாருடைய எல்லையையும் நான் மீற மாட்டேன். அதே போல யாரும் எனது வரம்பை மீறக்கூடாது. எனக்கு என்று உரிமைகள் உள்ளன. அதை ஏன் நீங்கள் மீறுகிறீர்கள்... எனது தேர்தல் வெற்றி பற்றி மீடியாக்காரர்கள் கவலைப்படவேண்டாம். மக்கள் தான் என்னை வெற்றி பெற வைத்தனர். அரசியல் எதிரிகளுக்கு வேண்டுமானால் கவலை இருக்கலாம். மீடியாக்கள் கவலைப்படவேண்டாம். மீடியாக்கள் சொல்வது எல்லாம் மக்களின் குரல் அல்ல. ஒரு அரசியல்வாதியாகவே என்னை நான் கருதவில்லை. எனது வருமானம் எல்லாம் சினிமாவில் இருந்து மட்டும் தான். எனது கடைசி மூச்சு உள்ளவரை ஊழல் செய்யமாட்டேன்.எனவே நான் தொடர்ந்து சினிமாவில் நடிக்க கட்சி மேலிடம் ஒரு வழியை காட்டவேண்டும்" என்றார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க