tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருவனந்தபுரம், அக். 11--–

கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆர். ஸ்ரீலேகா நேற்று பாஜவில் இணைந்தார். இவர் கேரளா தீயணைப்பு மற்றும் மீட்பு துறை டிஜிபியாக பணியாற்றி 2020ம் ஆண்டு ஓய்வு பெற்றவர். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். 

திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீலேகா வீட்டுக்கு கேரள பாஜ தலைவர் கே.சுரேந்திரன் மற்றும் நிர்வாகிகள் நேற்று சென்றனர். அவருக்கு சால்வை அணிவித்தும், தாமரை மலர்களை அளித்தும் சுரேந்திரன் கவுரவித்தார். பின்னர் பாஜ-வில் ஸ்ரீலேகா இணைந்ததாக சுரேந்திரன் அறிவித்தார்.

 இதுகுறித்து, சுரேந்திரன் கூறுகையில், "கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான ஸ்ரீலேகா மிகச்சிறந்த அதிகாரியாகச் செயல்பட்டார். அவர் டிஜிபி-யாக இருந்தார். போலீஸ் துறையில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். போலீஸ் துறையில் பெண்களின் சமத்துவம் மற்றும் அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தவும், பெண் உரிமைகளுக்கு ஆதரவாகவும் பல முடிவுகளை எடுத்துள்ளார்.

 அவர் மிகவும் பிரபலமான எழுத்தாளரும் ஆவார். அவர் மகாபலி குறித்து புதிய நாவல் எழுதியுள்ளார். அது நல்ல வரவேற்பை பெற்று விற்பனையாகி வருகிறது. இனி உள்ள நாட்களில் அவர் நாட்டுக்காகப் பணிசெய்ய உள்ளார். அவருடைய வருகை பாஜவுக்கும் மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்கும்’’என்றார்.

பாஜவில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் ஸ்ரீலேகா கூறுகையில், "நான் கடந்த 3 வாரங்களாக ஆலோசித்து பாஜ-வில் இணைந்துள்ளேன். பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பார்த்துதான் பாஜ-வில் என்னை இணைத்துக் கொண்டேன். நான் 33 ஆண்டுகளாக நடுநிலையான போலீஸ் அதிகாரியாக பணியாற்றினேன். 

உறுதிமொழி எடுத்துக்கொண்டதைப் போன்று நான் எந்த கட்சியிலும் இணையாமல் செயல்பட்டேன். ஓய்வுக்கு பிறகு நான் பல விஷயங்களை வெளியில் நின்று மற்றொரு கோணத்தில் பார்க்க முடிந்தது. அதன் பிறகு, என் அனுபவம் மற்றும் புரிதல் அடிப்படையில் மக்களுக்கு சேவை செய்ய இதுதான் வழி என உணர்ந்துகொண்டேன். எனக்கு பாஜ லட்சியத்தின் மீது நம்பிக்கை உள்ளதால் அவர்களுடன் நிற்கிறேன். 

இப்போது கட்சியின் உறுப்பினராக மட்டுமே இணைந்துள்ளேன். தேர்தல் பற்றியோ அதில் போட்டியிடுவது பற்றியோ என்னால் இப்போது கூறமுடியாது. நான் பாஜ-வுடன் இருப்பதே மக்களுக்கு செய்யும் சேவைதான்" என்றார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க