tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 80-ஆவது மாதக் கூட்டம், NK மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி பேராசிரியர் *குருசித்திர சண்முகபாரதி* தலைமை தாங்கினார். கோவில்பட்டி நாடார் மேல் நிலைப் பள்ளியின் பணி நிறைவு செய்த அறிவியல் பட்டதாரி ஆசிரியர் *பாலமுருகன்* முன்னிலை வகித்தார்.

 

மன்றக் காப்பாளர் செல்வின் அனைவரையும் வரவேற்றார்.

 

நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி *மு. அனுஸ்ரீ நாகவர்ஷினி* மற்றும் 1330 திருக்குறளையும் ஒப்புவித்த, N. சுப்பையா புரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி *ச. கர்ஷிணி* ஆகியோருக்கு மகிழ்வோர் மன்றத்தின் *இளம் சாதனையாளர்* விருதும், *உதயா* அவர்களுக்கு மகிழ்வோர் மன்றத்தின் *வாசிப்பதை நேசிப்பவர்* விருதும் வழங்கி பாராட்டப்பட்டது.

 

மாணவர்கள் நகைச்சவை துணுக்குகள் கூறினர். அதனை தொடர்ந்து தமிழ்த்தென்றல், முனைவர். *S.D. கலையமுதன்* அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, *"வாழ்க்கையை கொண்டாடுவோம்...!"* என்னும் தலைப்பில் மகிழ்வுரை வழங்கினார்.

 

மன்றக் காப்பாளர் துரைராஜ் நன்றி கூறினார்.

 

கூட்டத்தில் மன்ற இயக்குனர் ஜான்கணேஷ், மன்றக் காப்பாளர்கள் மோகன்ராஜ், சேர்மத்துரை, உரத்த சிந்தனை வாசகர் வட்ட தலைவர் சிவானந்தம், கோவில்பட்டிக் கம்பன் கழக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், மனோகர், தலைமையாசிரியர் காசிராஜன், தமிழாசிரியர்கள் ராஜசேகர், ஜான்சிராணி, ஆசிரியைகள் உலகம்மாள், ராதா, சித்ரா, ஓய்வு பெற்ற ஆசிரியர் அரிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க