tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

பெங்களூரு, ஜூலை 28–

கர்நாடகத்தில் என் மனைவிக்குசட்டப்படியே நிலம் ஒதுக்கப்பட்டது. அதுவும் பா.ஜ. ஆட்சியில்தான் வழங்கப்பட்டது.இதில் முறைகேடு எதுவும் கிடையாது என்று முதல்­வர் சித்­த­ரா­மையா ஆதாரங்களை காட்டி விளக்கம் அளித்தார்.

 இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:

 மைசூ­ரின் கெசரே கிரா­மத்­தில் எஸ்.சி., சமு­தா­யத்­தைச் சேர்ந்த ஜவரா என்­ப­வர், 1935ம் ஆண்டு அரசு விட்ட ஏலத்­தில் 3.16 ஏக்­கர் நிலத்தை வாங்­கி­னார். அவர் இறந்த பின், குடும்­பத்­தி­னர் விருப்­பத்­தின்­படி அவ­ரது மகன் தேவ­ராஜ் என்­ப­வ­ரது பெய­ருக்கு பட்டா மாற்­றப்­பட்­டது. அவரிடம் இருந்து , என் மனை­வி­யின் அண்­ணன் மல்­லி­கார்­ஜுன சுவாமி, நிலத்தை வாங்­கி­னார். ஏலத்­தில் வாங்­கிய நிலம் என்­ப­தால், எஸ்.சி., – எஸ்.டி., நில பாது­காப்பு சட்­டம் இதற்கு பொருந்­தாது. பின், 2006ல் என் மனை­விக்கு அந்த நிலத்தை, அவ­ரது அண்­ணன் தான­மாக வழங்கினார். 

இந்த நிலத்தை மனைகளாக பிரிப்பதற்காக மைசூரு நகர வளர்ச்சி குழுமம் ஆக்­கி­ர­மித்­தது, 2013ல் எங்­க­ளுக்கு தெரிந்­தது. 2013 முதல் 2018 வரை நான் முதல்­வ­ராக இருந்­தேன். 2014ல், எங்­கள் நிலத்­துக்கு பதி­லாக மாற்று நிலம் வழங்­கும்­படி, ‘மூடா’விடம் என் மனைவி சார்­பில் விண்­ணப்­பிக்­கப்­பட்­டது. ஆயி­னும், நான் ஆட்­சி­யில் இருந்த 2018ம் ஆண்டு வரை, இதில் எந்த முடி­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அதன்­பின், பா.ஜ., ஆட்­சி­யின் போது தான், 2021ல் என் மனை­விக்கு, 14 மனை­கள் ஒதுக்­கப்­பட்­டன. அது­வும் எங்­கள் நிலத்­தின் மதிப்­பில் வெறும் 50 சத­வீ­தம் மட்­டுமே. இதில் என்ன தவறு உள்­ளது? எங்­குமே முறை­கேடு நடக்­க­வில்லை.

கர்­நா­ட­கா­வில், 2-023ல் நடந்த சட்­ட­சபை தேர்­த­லில் தோல்வி அடைந்­த­தால், பா.ஜ., – ம.ஜ.த., கவ­லை­யில் உள்­ளது. எனவே, என் பெய­ருக்கு களங்­கம் ஏற்­ப­டுத்­தும் வகை­யில், பொய் குற்­றச்­சாட்­டு­களை கூறி 

வரு­கின்­ற­னர். நாற்பது ஆண்டுகளாக அரசியலில் களங்கமின்றி இருக்கிறேன். இரண்டாவது முறையாக நான் முதல்வர் ஆனதால், அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் என்னை அசிங்கப்படுத்துகின்றனர்.

இவ்­வாறு அவர் கூறி­னார்.

அப்போது நிலம் தொடர்­பான பல்­வேறு ஆவ­ணங்­களையும்அவர் காட்டினார்.

+++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க