tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூலை 19–-

பெண் போலீசாரை அவதுாறாக விமர்சித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை போலீசார் கடந்த மே 4ல் கைது செய்தனர். அதன்பின், அதே குற்றச்சாட்டு கொண்ட வழக்கில், திருச்சி போலீசாரும் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சில பெண் போலீசார் அளித்த புகார் அடிப்படையிலும், அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மே 12ல் கைது செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து, சவுக்கு சங்கரின் தாய் கமலா, ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன், பி.பி.பாலாஜி கொண்ட பெஞ்ச், முரண்பட்ட தீர்ப்பு வழங்கியது. குண்டர் தடுப்பு சட்ட கைது உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்த நீதிபதி சுவாமிநாதன், இந்த மனுவை விசாரிக்க வேண்டாம் என்று அதிகார செல்வாக்கு மிக்க நபர்கள் தன்னை அணுகியதற்கு அதிருப்தி வெளியிட்டிருந்தார். 

அரசு தரப்பு பதில் மனுவை பரிசீலித்த பிறகு முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி பி.பி.பாலாஜி தீர்ப்பளித்தார். அதன்பின் 3வது நீதிபதியாக விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த மனுவை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார். அந்த விசாரணை, நிலுவையில் உள்ளது.

இதுகுறித்து, சுப்ரீம் கோர்ட்டில் கமலா அப்பீல் செய்தார். அப்பீல் மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், ‘சவுக்கு சங்கர், பல தவறான தகவல்களை யூடியூப் பேட்டிகள் மூலம் பரப்பி, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவதால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்’ என்று வாதிடப்பட்டது. கமலா தரப்பில், ‘அரசு தரப்பு வாதத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். ஆட்கொணர்வு மனுவை ஐகோர்ட் தீர்மானிக்கட்டும். அதை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றும் முறையீட்டை வாபஸ் பெறுகிறோம். மருத்துவ சிகிச்சைக்காக, சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். சவுக்கு சங்கர், நீதித்துறையை விமர்சிக்க மாட்டார் என்று உறுதிமொழி வழங்க தயார்’ என்று வாதிடப்பட்டது.

நீதிபதிகள் கருத்து கூறுகையில், ‘‘நாங்கள் எந்த உறுதிமொழியையும் கேட்கவில்லை. உறுதி செய்யப்படாத தகவலை யாரும் பரப்பக் கூடாது என்று மட்டுமே அறிவுறுத்துகிறோம்’’ என்றனர். தொடர்ந்து, ‘‘குண்டர் தடுப்பு சட்ட கைது எதிர்த்த மனு, ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அங்கு விசாரணை தாமதம் ஆவதற்கு, சவுக்கு சங்கர் காரணம் அல்ல. எனவே, அந்த மனுவில் ஐகோர்ட் தீர்ப்பளிக்கும் வரை, அவருக்கு இடைக்கால ஜாமீன் அனுமதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு, அவருக்கு எதிரான பிற வழக்குகளுக்கு பொருந்தாது’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க