tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கோவை, மே 9

சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்படுவதால் ஜெயிலில் இருந்து அவர் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்தவர் சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.அதில் பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதுதவிர பல்வேறு யூடியூப் சேனல்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர் மீது கோவையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 4-ந்தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வைத்து சவுக்குசங்கரை கைது செய்தனர்.பின்னர் அவரை அன்றைய தினமே கோவை அழைத்து வந்து கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சவுக்குசங்கரை கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

கஞ்சா வழக்கில்

கைது

இதற்கிடையே தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்த போது, அவரது காரில் இருந்து கஞ்சா வையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகவும் சவுக்குசங்கர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கோவைக்கு வந்து, கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவரை கஞ்சா வழக்கிலும் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். அதனை தொடர்ந்து நேற்று, அவரை கஞ்சா வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து மதுரைக்கு பழனிசெட்டிபட்டி போலீசார் அழைத்து சென்றனர். மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி செங்கமலச் செல்வன், சவுக்கு சங்கரை வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கோவை மத்திய ஜெயிலுக்கு கொண்டு வந்து அடைக்கப்பட்டார்.

திருச்சி, நாகை

போலீசார் வழக்கு

இந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்குகள் பாய்ந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே சேலம், திருச்சியில் பெண் போலீசார் கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை, அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.இதேபோல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சென்னை போலீசார் இன்று கோவை ஜெயிலுக்கு வந்து சவுக்கு சங்கரிடம் வழங்கினர்.

இதேபோல் நாகையிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே பெண் போலீசார் குறித்து அவ தூறு கூறியதாக 6 வழக்குகள் மற்றும் தேனியில் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முச றியை சேர்ந்த டி.எஸ்.பி யாஸ்மின் என்பவர் திருச்சி சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதான சவுக்கு சங்கர் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கோவை 4-வது ஜூடிசியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கடந்த 7-ந் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கினை 10-ந் தேதி நாளை விசாரி ப்பதாக தெரிவித்தார். இந்த வழக்கு நாளை கோவை 4-வது ஜூடிசியல் கோர்ட்டில் வர உள்ளது.அப்போது அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? இல்லையா? என்பது தெரியவரும். அப்படியே ஒரு வேளை கோவை போலீசார் கைது செய்த வழக்கில் இருந்து அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும், தற்போது புதிதாக போடப்ப ட்டுள்ள வழக்குகளில் ஏதாவது ஒன்றில் அவரை மீண்டும் கைது செய்வ தற்கும் வாய்ப்புகள் அதிக மாக உள்ளது.

இப்படி ஒவ்வொரு நாளும் புதிது, புதிதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பதியப்பட்டு வரும் வழக்குகளால் சவுக்கு சங்கர் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய தடை விதிக்க கோரி சவுக்கு மீடியா நிறுவனத்தில் பணியாற்றும் விக்னேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கக் கூடாது என தடைவிதிக்கக் கோரி 3-வது நபர் எப்படி மனுதாக்கல் செய்ய முடியும்? யூகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி தள்ளுபடி செய்தார்.

தாயார் மனு

இதேபோல் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி அவரது தாயார் கமலா மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.கலைமதி ஆகியோர், கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கர் காயம் அடைந்துள்ளாரா என்பது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி அந்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். அதன்படி சட்ட பணிகள் ஆணைக்குழு வக்கீல்கள், அரசு மருத்துவர்கள் அட ங்கிய குழுவினர் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த அறிக்கையை அவர்கள் தனித்தனியாக சீலிடப்பட்ட கவரில் வைத்து கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

அரசு மருத்துவ

மனையில் சிகிச்சை

இதற்கிடையில் சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாகவும், கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்பேரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு மருத்துவக்குழுவினர் சிறைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த அறிக்கை நீதிமன்றத்தில் தனித்தனியாக சமர்பிக்கப்பட்டது. அறிக்கையின் அடிப்படையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க