tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 7–

சாதியை பார்ப்பவர் சனாதனவாதி அல்ல என்று தமிழக கவர்னர் ரவி கூறினார்.

   சென்னை கவர்னர் மாளிகையில் வள்ளலாரின் 201வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் கவர்னர் ரவி பேசியது:

எல்லோரும் ஒன்று என்பதைத்தான் சனாதன தர்மம் சொல்கிறது. சனாதன தர்மத்தில் வேறுபாடு இல்லை. பெரியவர், சிறியவர் என்ற கருத்து வேறுபாடு இல்லை. இதில் சிலர் வேறுபாடு காட்டி குளிர்காய நினைக்கின்றனர். அதற்கான அவசியம் இல்லை. சிலர் சனாதனத்தை ஜாதியுடன் தொடர்புபடுத்தி தவறான புரிதல்களை ஏற்படுத்தி வருகின்றனர். ஜாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல. 

அவதாரம்

நமது நாட்டின் தனித்துவத்துக்கும், தர்மத்துக்கும், உண்மைக்கும் எதிரான நிலை எப்போது ஏற்படுகிறதோ அப்போது இறைவனே ஒரு அவதாரம் எடுக்கிறார். அதுபோலத்தான் வள்ளலார் பெருமானும் நமது நாட்டில் அவதரித்தார். இந்த நாட்டில் எல்லோரும் சமம். யாரும் உயர்ந்தவர் இல்லை; தாழ்ந்தவர் இல்லை. இந்த தத்துவம் வேதத்தில் பல நூறாண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுள்ளது.

ஆங்கிலேய ஆக்கிரமிப்பால் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற நமது தத்துவ குடும்ப வாழ்வு சிதைக்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில்தான் வள்ளலார் அவதரித்தார்.

நமது அடையாளத்தையும், தர்மத்தையும் இழந்து இருந்த காலத்தில், ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று கூறி ஏற்ற தாழ்வு நிலையை உடைத்து வள்ளலார் நம் எல்லோரையும் ஒன்றிணைத்தார். தமிழகத்தில் பல அவதார புருஷர்கள் அவதரித்துள்ளனர். அவர்கள் பிரிந்திருந்த மக்களை ஒருங்கிணைத்து சென்றனர். அதனால்தான், பாரதத்தின் புண்ணிய பூமி தமிழ்நாடு; ஆன்மிக பூமி தமிழ்நாடு என்று போற்றப்படுகிறது. 

வள்ளலாரின் தேவை, இன்றைய நாளில் உலகத்துக்கு அதிகமாக தேவைப்படுகிறது. அந்த அளவு உலகம் பிரிந்து கிடக்கிறது. நம்நாட்டில், மகாராஷ்ராவிற்கு பிறகு தமிழகத்தில்தான் அதிகப்படியான தற்கொலைகள் நடக்கின்றன. சரியான வழிகாட்டுதல் இல்லாததால் மன அழுத்தத்தால் இந்த சம்பவங்கள் நடக்கின்றன. வள்ளலார் தத்துவங்களை பின்பற்றினால் இதற்கு விடை கிடைக்கும்.

இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க