நாம் இந்த ஆண்டு 200 மாணவர்களை அமிர்தாஸ் சர்வதேச விமான கல்லூரியில் சேர்க்க இருக்கிறோம். இதுவரை 50 பேர் சேர்ந்து இருக்கிறார்கள். இன்னும் குறைந்த இடங்களே உள்ளது. சென்னையின் மையப் பகுதியான ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவுக்கு எதிரில், ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகில் சென்னையின் அடையாளமாக, சென்னை அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி 40,000 சதுர அடியில் நகரின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச உள் கட்டமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள நமது கல்லூரியில் ஒவ்வொரு மாணவரும் தங்கள் படிப்பு காலத்தில் மூன்று விமான நிலையங்களை சுற்றி பார்க்க வைக்கப்படுவார்கள். மேலும் ஒரு விமானத்திற்குள் என்னென்ன உள்ளது என்பதை முழுக்க விமானத்திற்குள் சென்று கற்றுக் கொள்ள இருக்கிறார்கள். அது தவிர இரண்டு மாத காலம் வெளிநாட்டில் தங்கி குறிப்பாக மலேசியாவில் உள்ள சர்வதேச விமான பல்கலைக்கழகத்தில் தங்கி படிக்கப் போகிறார்கள்.
இதுபோன்ற வாய்ப்புகள் வேறு எந்த விமான கல்லூரியிலும் வழங்கப்படுவதில்லை. பல்கலைக்கழகங்களுக்கு எப்படி ஹார்வார்டு எடுத்துக்காட்டாக உள்ளதோ, அதுபோல் விமானத்துறைக்கு அடையாளமாக உள்ள மலேசியா ஏவியேஷன் கல்லூரியில் இரண்டு மாதம் நம் மாணவர்கள் தங்கி படிப்பார்கள். மேலும் டிக்கெட் புக்கிங் செய்வது தொடங்கி அனைத்து விதமான பயிற்சிகளும் அவர்களுடைய படிப்பு காலத்தில் வழங்கப்படும். மேலும் சிறப்பு மேம்பாட்டு பயிற்சி, கம்யூனிகேஷன் எனப்படும் தகவல் தொடர்பு, மொழி ஆளுமை பயிற்சியில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஹிந்தி என்று பல்வேறு மொழிகள் கற்றுத் தரவுள்ளோம்.
சென்னை, மே 8-
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தொடங்கப்பட்டுள்ள சென்னை’ஸ் அமிர்தா சர்வதேச விமான கல்லூரியில் சேர்ந்தால், “ஈசியா படிக்கலாம்; உலகம் முழுக்க பறக்கலாம்” என்று கல்லூரியின் தலைவர் ஆர். பூமிநாதன் அழைப்பு விடுத்தார். மேலும் படிக்கும் போதே மாதம் ரூ.8000 முதல் ரூ.15,000 வரை சம்பாதிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
உணவக மேலாண்மை கல்வித் துறையில் கடந்த 14 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம், நடப்பாண்டு சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமான கல்லூரியை தொடங்கியுள்ளது. அதன் தொடக்க விழா, நேற்று மாலை எழும்பூர் ரமதா நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய சுரேன், தனது வரவேற்புரையில், கடந்த 14 ஆண்டுகளாக உணவக மேலாண்மை கல்லூரியில் சாதனை படைத்த சென்னைஸ் அமிர்தா, இப்போது சென்னை சர்வதேச விமான கல்லூரியை தொடங்கியுள்ளது. ஓட்டல் மேலாண்மை துறையில் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி சாதனை படைத்துள்ளது. அதோடு 124 ஆண்டு கால சமையல் ஒலிம்பிக் வரலாற்றில், இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்றுக் கொடுத்து சாதனை படைத்துள்ளது. மேலும் விமான துறையில் இண்டிகோ, ஏர் ஏசியா போன்ற நிறுவனங்களில் 26 பேரை வேலைக்கு அமர்த்தி சாதனை படைத்துள்ளது என்று கூறினார்.
“உலகத்தின் மூலதனம் அறிவு”
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அண்ணா பல்கலைக்கழக வருகைதரு பேராசிரியரும் அறிவியலாளருமான இ.கே.டி.சிவக்குமார் பேசியதாவது:-சென்னை அமிர்தா கல்வி நிறுவனத்துடன் நெடுங்காலமாக தொடர்பில் இருக்கிறேன். அண்ணா பல்கலைகழகத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றி இருந்தாலும் இஎஸ்ஆர்ஓ என்ற அறக்கட்டளை நிறுவி அதன்மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து அவர்க அவர்களுடைய முன்னேற்றத்துக்கு வழிகாட்டி வருகிறேன். அந்த அமைப்பில் சென்னை அமிர்தா தலைவர் பூமிநாதன் அவர்களும் என்னோடு ஆர்வமாக பங்குபெற்று வரக்கூடியவர்கள்.
“உலகத்தின் மூலதனம் அறிவு” என்பதால் , அறிவு உங்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். உலக அளவில் நானோ தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பங்காற்றி இருக்கிறேன். தொழில்நுட்பம் எப்பொழுதும் நம்மை உயர்த்தும் மேம்படுத்தும் என்ற அடிப்படையில், திறன் மேம்பாடு பெற்றால் வளர முடியும். அதற்கு உதவும் வகையில், சென்னை அமிர்தா, சர்வதேச விமான கல்லூரியை தொடங்கியுள்ளது. உணவக மேலாண்மை கல்லூரி போல, பெரும் வெற்றி பெறும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
25 ஆயிரம் பேருக்கு வேலை
சென்னை அமிர்தா சர்வதேச விமான கல்லூரியை தொடங்கி வைத்து, அதன் தலைவர் ஆர். பூமிநாதன் பேசியதாவது:-
2010 ஆம் ஆண்டு சென்னை சென்னைஸ் அமிர்தா உணவக மேலாண்மை கல்லூரியை தொடங்கினோம். அப்பொழுது பல்வேறு பல்கலைக்கழகங்கள் கேட்டரிங் துறையிலிருந்து விலகிக் கொண்டிருந்தது. ஆனால் நாங்கள் அப்பொழுது கேட்டரிங் துறையில் கால் வைத்தோம். கடந்த 14 ஆண்டுகளில் மிகப்பெரும் வெற்றி பெற்று இருக்கிறோம்.
இன்று பல்வேறு தொலைக்காட்சிகளில் உணவு தொடர்பான நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகிறது. அதில் நமது உணவக மேலாண்மை கல்லூரியில் படித்த பலர் பங்கு பெறுகிறார்கள். இன்று ஐடிசி சோழா, தாஜ் கோரமண்டல், ரமதான் உள்ளிட்ட முன்னணி நட்சத்திர உணவகங்களில் எல்லாம் அமிர்தா வில் படித்த பலர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.
கல்வி என்ற ஆயுதம்
ஒருமுறை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்னிடம் கூறினார். கல்வி என்ற ஒரு சிறந்த ஆயுதத்தை நீங்கள் வைத்துள்ளீர்கள். அதனை சரியாக பயன்படுத்துங்கள் என்றார். அதனை நான் எப்பொழுதும் கடைபிடித்து வந்துள்ளேன். உணவகத்துறையில் நான் நுழைந்தபோது எப்படி அதில் பெரும் வாய்ப்புகள் இருந்ததோ அதேபோல் இப்பொழுது விமான துறையில் பல்வேறு காலியிடங்கள் இருப்பதை அறிந்து சர்வதேச விமான கல்லூரியை தொடங்கியுள்ளோம்.
சென்னை விமான நிலையத்தில் மட்டும் பல்வேறு நிலைகளில் 3000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருக்கின்றது. 3000 திறன்மிக்க பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தியாவில் உள்ள 137 விமான நிலையங்களில் ஒவ்வொன்றிலும் சராசரியாக 3000 பேர் தேவைப்படும் நிலையில் இந்தியா முழுக்க 4 லட்சத்து பதினோராயிரம் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த அளவுக்கு வேலை வாய்ப்பு உள்ள துறையாக விமானத்துறை இருந்து வருகிறது.
உலகம் முழுக்க பறக்கலாம்
இந்த படிப்புகளில் சேர டிப்ளமோ கோர்ஸில் சேர பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎஸ்சி இளங்கலை பட்டப் படிப்பில் சேர 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு லட்சத்து 40 ஆயிரம் மட்டுமே வசூலிக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இது எல்லாவற்றையும் சுருக்கமாக ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமான கல்லூரியில் சேருங்கள். “ஈசியா படிக்கலாம்; உலகம் முழுக்க பறக்கலாம்” என்று ஒற்றை வரியில் சொல்லி நிறைவு செய்கிறேன் என்றார்.
வித்தியாசமாக செய்கிறோம்
முன்னதாக வாழ்த்துரை வழங்கிய சென்னைஸ் அமிர்தா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அலுவலர் கவிதா நந்தகுமார் பேசும்போது, வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களை செய்வதில்லை. மாறாக செயல்களை வித்தியாசப்படுத்தி செய்கிறார்கள் என்று கூறப்படும். சென்னைஸ் அமிர்தா கல்லூரி அப்படித்தான் செயல்களை வித்தியாசப்படுத்தி செய்வதால் மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளது. 25 ஆயிரம் பேரை உணவக துறையில் பணியமர்த்தி வெற்றி பெற்றுள்ளோம். அதேபோல சென்னை அமிர்தாவின் சர்வதேச விமான கல்லூரியும் விமான கல்வித் துறையில் மிகப்பெரிய புரட்சியை செய்யும் என்றார்.
தலைமை கல்வி இயக்குனர் லியோ பிரசாத் பேசு பேசும்போது, விமானத்துறை எல்லையில்லா வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமான பள்ளி கல்லூரி விமானத்துறையில் துறையின் கலங்கரை விளக்கமாக (Light house) திகழும் என்று வாழ்த்தினார்.
தரத்தில் சமரசமில்லை
டீன் மில்டன் பேசும்போது, நான் 32 ஆண்டுகள் உணவக மேலாண்மைத்துறை துறையில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளேன். கடைந்த 15 ஆண்டுகளாக சென்னை அமிர்தா உணவ துறையில் சாதனை படைத்து விமான துறையில் நுழைந்துள்ளது. எங்கள் கல்லூரியின் நிறுவனர், தரத்தில் எப்போதும் சமரசம் செய்து கொள்வதில்லை. அதனால் பிரபலமான சர்வதேச கல்லூரிகளில் ஒன்றாக சென்னைஸ் அமிர்தா சர்வதேச கல்லூரி திகழும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்றார்.
நிகழ்ச்சியின் நிறைவாக பானுமதி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.