tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஆக. 10–

சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் கருணாநிதி ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது. மாணவர்களுக்கு ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் அளவிலான கல்வி உதவித் தொகையை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பேசியதாவது: 

  உயர் கல்வியில் படிக்கிற மாணவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே 51 சதவிகிதம் பெற்று தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளது. அதற்குக் காரணம் நம் `திராவிட மாடல்’ அரசு.   

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான, நம் தலைவர் தலைமையிலான `இந்தியா’ கூட்டணி 40 க்கு 40 தொகுதிகள் வெற்றி பெற்றது என்றால், அதற்கு முக்கிய காரணம், இங்கு வந்திருக்கிற வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள்தான். அதிலும், இந்த சென்னை மேற்கு மாவட்டத்தில் இருக்கக்கூடிய அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய மூன்று தொகுதிகளில் ஒரு போட்டியே வைத்திருந்தோம். யார் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று காட்டப்போகிறோம் என்று. அதில் வெற்றிபெற வைத்தது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிதான்.   

இரண்டரை கோடி 

சென்ற ஆண்டு நம் தொகுதியைச் சேர்ந்த 600 மாணவர்களுக்கு 69 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வழங்கினோம். அந்த வரிசையில், இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும், கல்லூரி மாணவர்களுக் தலா 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 855 மாணவர்களுக்கு ரூபாய் 1 கோடியே 8 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை இந்த மேடையில் இங்கு வழங்கியிருக்கிறோம். இப்படி இந்த தொகுதியைச் சேர்ந்த 2,000 ஆயிரம் மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், கிட்டத்தட்ட 2 கோடியே 43 லட்சம் அளவிற்கு கல்வி உதவித்தொகையை வழங்கியிருக்கிறோம். 

கல்வியோடு சேர்த்து விளையாட்டும் முக்கியம். உடற்பயிற்சி முக்கியம். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். உங்கள் கல்வியை மட்டுமே சிந்திக்க வேண்டும். கல்விதான் உங்களிடத்திலிருந்து பிரிக்க முடியாத சொத்து. கல்வியே சிறந்த செல்வம். அந்தக் கல்வி உங்களுக்கு வந்து சேர்வதற்கு நம் அரசின் சார்பாக, எப்போதுமே ஒரு தாயாக, தந்தையாக நம் முதலமைச்சர் மாணவர்களுடன் இருப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க