tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

பழனி, ஆக. 25–

‘‘துறவு தான் ஞானத்தின் உச்சம். அது தான் ஆண்டிக்கோலம்,’’ என, குன்றக்குடி அடிகளார் பேசினார்.

 பழனியில் நடக்கும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் அவர் பேசியதாவது:

 அளவற்ற பெருமைகள் உடைய பழனியில் முத்தமிழ் மாநாடு நடக்கிறது. பழனியில் இருக்கும் முருகன் ஆண்டிக்கோலத்தில் இருக்கிறார். துறவு தான் ஞானத்தின் உச்சம். 

அதைத்தான் முருகன் எடுத்துரைக்கிறார். எங்கெல்லாம் முருகன் குடி இருக்கிறாரோ, அங்கெல்லாம் மக்களின் குறைகள் தீரும்; நோய்கள் தீரும்; பிணிகள் அகலும். 

கடவுளை நான் ஏற்றுக் கொள்கிறேனோ, இல்லையோ; கடவுள் ஏற்றுக் கொள்ளும் வகையில் நான் நடந்து கொள்கிறேனா, இல்லையா என்பது தான் முக்கியம்.  

  மாநாட்டின் மணிமகுடமாக முதல்வர் ஸ்டாலின் உரை இருந்தது. அன்பால் உயிர்கள் ஒன்றாகும்; அறத்தால் உலகம் நன்றாகும். இதுதான் இந்த மாநாட்டின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தருமபுர ஆதீனம்

 

தருமபுர ஆதீனம் பேசியதாவது: 

காசி, அறுபடை வீடுகள் போன்ற தலங்களுக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளை அரசு செய்து வருகிறது. மலேஷியா, சிங்கப்பூர், மொரீசியஸ் என, பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த மாநாட்டிற்கு வந்துள்ளனர். 

சங்க இலக்கியங்கள் துவங்கி ஆதீனங்கள் வரைக்கும், பக்தி இலக்கியங்களில் முருகன் புகழ் தான் அதிகமாக பாடப்பட்டிருக்கின்றன. உலக நாடுகள் முழுதும் பரவி இருக்கிற தமிழர்கள் வழிபடும் கடவுளாக முருகன் இருக்கிறார்.

இஇவ்வாறு அவர் பேசினார்.

 

மதுரை ஆதீனம் பேசுகையில், "இந்த மாநாடு வாயிலாக இரு கோரிக்கைகள் வைக்கிறேன். சங்கரன் கோவிலில் மாவீரன் புலித்தேவன் சிலையை நிறுவ அரசு அனுமதிக்க வேண்டும். கோவில் நிலங்களுக்கு குத்தகை யாரும் கொடுப்பதில்லை. 

கோவில் நிலங்களை பலர் வைத்துள்ளனர். மேலும், கோவில் நிலங்களை மீட்க பாடுபட வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறேன். என்னையும், அமைச்சர் சேகர்பாபுவையும் ‘டிவி’காரர்கள் தான் எதிரிகள் ஆக்கி விட்டனர். ஆனால், நாங்கள் நண்பர்கள் தான்,’’ என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். இதனால், நிகழ்ச்சி அரங்கத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க