tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கோவை, ஜூலை 1–

சட்டசபையில் பேசிய அமைச்சர் துரைமுருகன்," டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் தான் கள்ளச்சாராயம் குடிக்கின்றனர். அரசுக்கடை மது அவர்களுக்கு குளிர்பானம் போல தெரிகிறது" என்று கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு தற்போது சர்ச்சை ஆகி உள்ளது.

 இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

 சட்டசபையில் முதலமைச்சர் முன் மூத்த அமைச்சர் என்ன பேசுவது என்று தெரியாமல் 'கிக்கு' என்கின்றார்.. சரக்கு பற்றி பேசுகிறார், கிறுக்குத்தனமாக பேசுகிறார். 69 உயிருக்கும் முழு சாட்சி நீங்கள்தான் என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார் என்பதைத்தான் இங்கு பார்க்க முடிகிறது. 

கள்ளச்சாராயம் வரக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகளை நடத்தி ஆண்டு முழுவதும் 45 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து, ஒட்டுமொத்த தமிழகத்தையும் குடிகாரர்களாக மாற்றிய பெருமைதான் இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. அதில் தரம் இல்லை என்று மூத்த அமைச்சர்கள் ஒத்துக் கொள்கிறார்கள் என்றால், கள்ளச்சாராயம் நோக்கி யார் செல்ல வைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. 

 அவர்களாக திருந்தினாலே தவிர திருத்த முடியாது என்று சொல்கிறார். எல்லா இடங்களிலும் காவல் நிலையம் திறக்க முடியாது என்று சொல்பவர்களுக்கு எப்படி டாஸ்மாக் மட்டும் திறக்க முடிகிறது? கள்ளச்சாராயம் காய்ச்சினால் ஆயுள் தண்டனை மற்றும் பத்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். இவ்வளவு ஆண்டுகள் தூங்கிவிட்டு இப்போதுதான் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்தது போல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் இது உண்மையிலேயே கண்துடைப்பு நாடகம் . 

இவ்வாறுஅவர் கூறினார்.

பா.ஜ. தலைவர் அண்ணாமலை கூறுகையில், "“டாஸ்மாக் மதுபனத்தின் தரம் குறைவு காரணமாகவே சில கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை நாடுகின்றனர்; டாஸ்மாக் மதுபானம்பற்றி அமைச்சர் துரைமுருகன் கூறியது உண்மைதான்; இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு” என்றார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க