tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூன் 8

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து ஜனாதிபதியை அவர் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். 9 ந்தேதி அன்று மாலை 6 மணி அளவில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் 294 இடங்களை பிடித்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இக்கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிக்குமார் மற்றும் சில சுயேச்சைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பழைய நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார், பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா, லோக்ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித்பவார், பட்னாவிஸ், பா.ஜ.க. மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், எம்.பி. க்கள் கலந்து கொண்டனர்.

அரசியல் சாசன

புத்தகத்தை வணங்கினார்

இந்த கூட்டத்தில் பங்கேற்க மோடி வந்த போது அனைவரும் எழுந்து நின்று 'மோடி.. மோடி...’ கோஷம் போட்டனர். மோடி அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு நேராக இந்திய அரசியலமைப்பு புத்தகம் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று, அதை கையில் எடுத்து நெற்றியில் ஒத்திக்கொண்டார். பின் அதை தலைவணங்கி தொட்டுக் கையெடுத்துக் கும்பிட்டு அதன்பின்னரே தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தார்.

மோடிக்கு அருகில் சந்திபாபு நாயுடு, நிதிக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் அமர்ந்திருந்தனர்.

கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடியின் பெயரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதனை வழிமொழிந்தார். இதன்பின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக பேசி பிரதமராக மோடியை தேர்வு செய்வதற்கு தங்கள் ஆதரவினை தெரிவித்தனர்.

கூட்டம் நிறைவடைந்ததும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள். 9 ந்தேதி அன்று மாலை 6 மணி அளவில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கிறார் என்று பா.ஜ.க. தலைவர் பிரகலாத் ஜோதி தெரிவித்தார்.

அனைவருக்குமான வளர்ச்சி

ஜே.பி.நட்டா பேசியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணி உட்பட அனைத்து தலைவரின் சார்பிலும் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் சேவைக்காக பிரதமர் மோடி தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்.

ஒடிசாவில் முதன்முறையாகவும், அருணாச்சல பிரதேசத்தில் 3வது முறையாகவும் பா.ஜ.க.ஆட்சி அமைக்கிறது. 3வது முறை வெற்றி பெறுவது வரலாற்று சாதனை. யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத வளர்ச்சியை இந்தியா பார்த்து உள்ளது. அனைவருக்கும், அனைவருக்குமான வளர்ச்சி என்ற உயரிய நோக்கத்துடன் பா.ஜ.க. கூட்டணி அரசு எப்போதும் செயல்படும் என்றார்.

ஒரே குடும்பமாக ஆட்சி

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது:

18வது நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தியாவின் வளர்ச்சிக்கு மோடியின் உழைப்பே காரணம். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒரே குடும்பமாக இருந்து ஆட்சியையும், நாட்டையும் வழிநடத்தும். பா.ஜ.க. கூட்டணி அரசு மீண்டும் அமைவது என்பது நிர்பந்தம் அல்ல. தேசத்திற்கான கடமையாகும். இந்தக்கூட்டணி நிபந்தனையில் உருவானது அல்ல. இந்த கூட்டணி அரசுக்கு எந்த அழுத்தமும் கிடையாது. 1962க்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்துள்ளது. பா.ஜ.க. கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மீண்டும் மோடியை முன்மொழிகிறோம். இவ்வாறு அவர் பேசினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று மோடி, மோடி என கோஷம் போட்டனர்.

140 கோடி மக்களின்

முன்மொழிவு

அதன் பிறகு, மோடியை பிரதமராக்க வேண்டும் என ராஜ்நாத் முன்மொழிந்ததை, வழிமொழிந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அவர் பேசியதாவது:

காஷ்மீர் முதல் குமரி வரை மக்களின் ஆசியுடன் மோடி மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்க உள்ளார். பிரதமர் பதவிக்கு மோடியை முன்னிறுத்துவது இங்கு அமர்ந்திருக்கும் தலைவர்களின் விருப்பம் மட்டுமல்ல. இது நாட்டிலுள்ள 140 கோடி மக்களின் முன்மொழிவு. இது அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி நாட்டை வழிநடத்தும் நாட்டின் குரல்” என்று தெரிவித்தார்.

இந்தியாவுக்கு சரியான

தலைவர்: சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு பேசுகையில், “தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றதற்கு அனைவரையும் வாழ்த்துகிறேன். தேர்தல் பிரச்சாரத்தின் போது 3 மாதங்களாக பிரதமர் மோடி ஓய்வே எடுக்கவில்லை. இரவு பகலாக பிரச்சாரம் செய்தார். எந்த உற்சாகத்துடன் பிரச்சாரத்தை தொடங்கினாரோ அதே உற்சாகத்துடன் பிரச்சாரத்தை முடித்தார். ஆந்திராவில் நாங்கள் 3 பொதுக் கூட்டங்கள் மற்றும் ஒரு பெரிய பேரணியை நடத்தியுள்ளோம். இது ஆந்திரப் பிரதேசத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் முன்னெடுப்புகளை செய்தது. நரேந்திர மோடிக்கு தொலைநோக்கு பார்வை உள்ளது. மேலும் அவர் தனது கொள்கைகளை கச்சிதமாக நேர்மையாக செயல்படுத்துகிறார். இன்று இந்தியாவுக்கு சரியான தலைவர் இருக்கிறார். அதுதான் நரேந்திர மோடி. இந்தியாவிற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

கடந்த நான்கு தசாப்தங்களாக அரசியலில் இருக்கும் நான் எத்தனையோ தலைவர்களை பார்த்திருக்கிறேன். உலக அளவில் இந்தியாவை பெருமைப்படுத்தியதற்காக மோடிக்கு எல்லாப் புகழும் செல்ல வேண்டும். நாட்டுக்காக அவர் செய்த மிகப்பெரிய சாதனை இது. அவரது தலைமையில், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தை எட்டியுள்ளோம்.

இப்போது, இந்த ஆட்சியில் அவர் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றப் போகிறார் என்று நாங்கள் நம்புகிறோம். மோடி தலைமையில், உலகில் எங்கு சென்றாலும், அதிக தனிநபர் வருமானம் இந்தியர்களால் பெறப்படுகிறது. நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். அவரது தலைமையில், இந்தியர்கள் எதிர்காலத்தில் உலகத் தலைவர்களாக மாறப் போகிறார்கள் என்றார்.

நிதிஷ்குமார்

நிதிஷ் குமார் பேசுகையில், “பிகாரில் நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது மிகவும் நல்ல விஷயம், நாங்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவோம். ஞாயிற்றுக்கிழமை நீங்கள் பிரதமராகப் பதவியேற்கிறீர்கள். ஆனால் நீங்கள் பிரதமராக பதவியேற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

இந்த தேர்தலில் சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜெயித்திருக்கிறார்கள். அடுத்த முறை எல்லாரும் தோற்பார்கள். எனக்கு அதில் முழு நம்பிக்கை உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நாடாளுமன்ற பாஜக தலைவராகவும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க