tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

அகமதாபாத், நவ. 21–

நாட்டின் 75வது அரசியல்சாசன தினமான வரும் 26ம் தேதிக்கு பிறகு, தண்டனைக் காலத்தில் மூன்றில் ஒருபங்கு தண்டனையை அனுபவித்து முடித்தவர்களில், மிகக் கொடூரமான குற்றங்கள் அல்லது சட்டரீதியில் அனுமதிக்கப்படாத தண்டனைக் கைதிகளை தவிர மற்ற தண்டனைக் கைதிகள் சிறையில் இருக்க வேண்டியதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில், 50-வது அகில இந்திய போலீஸ்துறை அறிவியல் மாநாடு நடந்தது. இதில், மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை  அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:
எந்த ஒரு அமைப்பு முறையும் 50 ஆண்டுகளுக்கு மாறாமல் இருந்தால் அது வழக்கொழிந்து போய்விடும். கடந்த பல தசாப்தங்களாக நாட்டிலும், குற்றங்களிலும், குற்றங்கள் செய்வதிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்களுக்கு ஏற்ப, நம் நாட்டில் போலீஸ்துறை மாறியுள்ளதா என்று நாம் சுயபரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். 
சரியான நேரத்தில் மாற்றங்களைச் செய்வதில், நாம் ஓரளவு பின்தங்கியுள்ளோம் என்பதுதான் உண்மை. எதிர்கால சவால்களைப் புரிந்து கொள்ளாமல், நமது திட்டமிடல் ஒருபோதும் வெற்றிகரமாக இருக்க முடியாது.
கணிணிமயமாக்கல்
புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்கான முதல்படி கணினி மயமாக்கல். நாட்டின் 100 சதவீத போலீஸ் ஸ்டேஷன்களும் கணினி மயமாக்கப்பட்டு, குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலைப்பின்னல் மற்றும் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. 
கூடுதலாக, 22 ஆயிரம் கோர்ட்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. -இரண்டு கோடிக்கும் அதிகமான கைதிகளின் தரவுகள்  இப்போது இ – -சிறை அமைப்பின் கீழ் கிடைக்கின்றன. 
இ- – -பிராசிக்யூஷன் மூலம், 1.5 கோடிக்கும் அதிகமான வழக்குகளுக்கான தரவு கிடைக்கிறது. மின்-தடயவியல் மூலம், 23 லட்சத்துக்கும் அதிகமான தடயவியல் முடிவுகளுக்கான தரவுகளையும் அணுக முடியும்.  வரவிருக்கும் நாட்களில்,  உலகம் எதிர்கொள்ளும் பல சவால்கள் உள்ளன. அவற்றுக்கு இந்தியாவில் தீர்வு காண நாம் முயற்சிக்க வேண்டும். 
3 ஆண்டுகளுக்குள் நீதி
 சைபர் குற்றங்களைக் கையாள்வது, ஊடுருவலைத் தடுப்பது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எல்லைகளைப் பாதுகாத்தல், டிரோன்களின் சட்டவிரோத பயன்பாட்டை நிறுத்துதல், போதைப்பொருள் புலனாய்வு மற்றும் விழிப்புணர்வில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை அதிகரித்தல் ஆகியவை மிக முக்கியமானவை.
இந்த  துறைகளில் முன்னேற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் திறமையான நபர்களுடன் போலீஸ்துறை அறிவியல் மாநாடு ஒத்துழைக்க வேண்டும்.
நாட்டில், குற்றவியல் நீதி முறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புதிய 3 குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்குள் நீதி கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.
கைதிகள் விடுதலை
 வரும் 26ம் தேதி அரசியல்சாசன தினம் கொண்டாடப்பட உள்ளது.  அதற்குள், தண்டை காலத்தில் மூன்றில் ஒரு பங்கை சிறையில் கழித்த கைதிகள் அனைவரையும், சட்டப்பூர்வமாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
குறிப்பிட்ட காலத்துக்குள் வழக்கு விசாரணையை முடிக்க, கோர்ட், போலீஸ் மற்றும் அரசு தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், குறிப்பிட்ட காலத்தக்கு பின், விசாரணை நடக்கவில்லை என்றால், மிகப் பெரிய குற்றவழக்குகளை தவிர, மற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், நவம்பர் 26க்கு பின், நாட்டில் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை குறையும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.

ராசி பலன்

உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அரசு செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் உருவாகும்.  தவறிப்போன சில பொருட்கள் மீண்டும்... மேலும் படிக்க

எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். தேவையில்லாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். எண்ணங்களை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை குறைத்துக்... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். கலைப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பழக்கவழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்களும், நட்புகளும் கிடைக்கும். புதிய வியாபாரம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும்... மேலும் படிக்க

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு செயல்பாடுகளில் இருந்துவந்த... மேலும் படிக்க

திறமைகளை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள்.... மேலும் படிக்க

முயற்சியில் அலைச்சலும் அனுபவமும் அதிகரிக்கும். உயரதிகாரிகள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் தொடங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில... மேலும் படிக்க

வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மனதளவில் சில மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் பொறுமை காக்கவும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள்... மேலும் படிக்க

கலகலப்பான பேச்சுக்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். வழக்கு செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். நிர்வாகத் துறைகளில் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும்.... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். எதையும் எதிர்கொள்ளும் மனஉறுதி மேம்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். வெளியூர் பயணங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். பயனற்ற... மேலும் படிக்க

மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சாதகமான சூழல் காணப்படும். கடன் பிரச்சனைகள் குறையும். வருமான ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய... மேலும் படிக்க