tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, செப். 1–

தமிழகத்தில் புதிதாக இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி துவக்கிவைத்தார்.

 தமிழகத்தில் சென்னை–திருநெல்வேலி, சென்னை–கோயம்புத்துார், சென்னை–மைசூர், சென்னை–விஜயவாடா, கோயம்புத்துார்–பெங்களூர் தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை–நாகர்கோவில் (வாரம் 4 நாட்கள்) வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது சென்று வருகிறது.

மேலும் 2 ரயில்கள்

இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை–நாகர்கோவில், மதுரை– பெங்களூர் இடையே 2 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும், உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட்– லக்னோ இடையே ஒரு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் விட ரயில்வே முடிவு செய்தது. இந்த 3 புதிய ரயில்களையும் பிரதமர் மோடி, டெல்லியில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் வழியாக கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார். 

வளர்ச்சி அடைந்த இந்தியா

அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:

இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய வளர்ச்சிப் பயணத்தில் மதுரை– - பெங்களூர், சென்னை– - நாகர்கோவில், மீரட் –- லக்னோ வந்தே பாரத் ரயில்கள் என இன்று புதிய அத்தியாயத்தைக் காண்கின்றன. வந்தே பாரத் ரயில்களின் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் காரணமாக தேசம், வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.

கோயில் நகரமான மதுரை, இப்போது ஐடி சிட்டி பெங்களூருடன் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்கள் அல்லது பண்டிகை காலங்களில் இது இணைப்பை எளிதாக்குவது மட்டுமல்லாமல், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சென்னை –- நாகர்கோவில் வழித்தடமானது மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். வந்தே பாரத் ரயில்களுடன் இணைக்கப்பட்ட இடங்களில் சுற்றுலா வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியும் அதிகரித்து, வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. இதனால், வந்தே பாரத் ரயில்கள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழகத்துக்கு கூடுதல் நிதி

2024 – 25ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்துக்கு முன் எப்போதும் இல்லாத அளவில் ரூ. 6 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. 2014ல் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டதை விட, இது 7 மடங்கு அதிகம். இன்று துவக்கப்பட்டுள்ள 2 வந்தே பாரத் ரயில்களை சேர்த்து, தமிழகத்தில், ஓடும் வந்தே பாரத் ரயில்களின் எணணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. இன்று, நாடு முழுவதும் 102 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதுவரை 3 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 

இந்த எண்கள், வந்தே பாரத் ரயில்களின் வெற்றிக்கான ஆதாரம் மட்டுமல்ல, இவை இந்தியாவின் விருப்பங்கள் மற்றும் கனவுகளின் சின்னம்.

   இந்த ஆண்டு பட்ஜெட்டில், ரயில்வேக்கு ரூ. 2.5 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் பழைய பிம்பத்தை மாற்ற அரசு உயர் தொழில்நுட்ப சேவைகளுடன் இணைத்து வருகிறது. வந்தே பாரத் உடன், அமிர்த பாரத் ரயில்களும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. மக்களின் வசதிக்காக நமோ பாரத் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

நகரங்களுக்குள் ஏற்படும் போக்குவரத்து பிரச்சனைகளை சமாளிக்க, வந்தே மெட்ரோ விரைவில் தொடங்கப்படும்.

பல பத்தாண்டுகளாக இருந்து வரும் பிரச்னைகளைத் தீர்க்கும் நம்பிக்கையை உயர்த்த ரயில்வே கடுமையாக உழைத்துள்ளது. இந்த திசையில் இந்தியா செல்ல நீண்ட தூரம் உள்ளது. ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவருக்கும், இந்திய ரயில்வே ஒரு வசதியான பயணத்தை உறுதி செய்யும் வரை, அதற்கான பணிகள் நிற்காது. நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு, வறுமையை ஒழிப்பதில் பெரும் பங்கு வகிக்கும். 

இவ்வாறு மோடி பேசினார். 

மதுரை 

மதுரை–பெங்களூர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தபோது, மதுரை ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சோமண்ணா பேசும்போது, " "தென்னிந்தியாவின் நுழைவாயிலாக உள்ள தமிழ்நாடு பண்பாடு,கலாச்சாரம் உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்குகிறது.கடந்த 2009–- 2014 ம் ஆண்டில், காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு வெறும் 75 கோடி ரூபாய் மட்டுமே ரயில்வேக்கு நிதி ஒதுக்கியது" என்றார்.

* மதுரை– - பெங்களூர் வந்தே பாரத் ரயில்(20671) அதிகாலை 5.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி , கரூர், நாமக்கல்,சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியாக மதியம் 1 மணிக்கு பெங்களூர் கண்டோன்மென்டுக்கு சென்றடையும்.

மறுமார்க்கமாக, மதியம் 1.30க்கு பெங்களூர் கன்டோன்மென்டில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மதுரை வந்து சேரும். பயணநேரம் 8 மணி 15 நிமிடம் ஆகும். 

சென்னை

சென்னை–நாகர்கோவில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தபோது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் புதன்கிழமை தவிர மற்ற 6 நாட்கள் இயங்கும். இந்த ரயில் வரும் நாளை முதல் (செப்டம்பர் 2ம் தேதி) செயல்பாட்டுக்கு வருகிறது. 

* சென்னை – - நாகர்கோவில் (20627) வந்தே பாரத் ரயில், சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும். தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு பிற்பகல் 1.50 மணிக்கு செல்லும்.

* மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு .

++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க