tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூலை 26– 

தமிழ்நாட்டை பிரதமர் மோடி புறக்கணிக்கவில்லை. கடந்த பத்தாண்டுகளில் ரூ.௧௦லட்சம் கோடிநிதி ஒதுக்கிஉ ள்ளார் என்று அண்ணாமலை கூறிஉள்ளார்.

பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று வெளியிட்ட வீடியோ அறிக்கையில் கூறியதாவது: 

பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்ததால், டில்லியில் ஜூலை 27ல் (நாளை) நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது நகைப்புக்குரியது. 

இப்போது மட்டுமல்ல, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் நடந்த நிதி ஆயோக் கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்த முறை, ஒரு சாக்கு கிடைத்துள்ளது. உண்மையில், பிரதமர் மோடி உட்பட எல்லா மாநில முதல்வர்களும் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டு, தமிழகத்தின் கோரிக்கையை வலியுறுத்தி இருக்க வேண்டும். அவர் கூறும் காரணத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மத்திய பட்ஜெட், எல்லா மாநிலங்களுக்கும் பலன் தருகிறது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பதவியில் இருந்த 10 வருடங்களில், குறிப்பாக ப.சிதம்பரம் நிதி அமைச்சராக வந்தபோது எத்தனை முறை தமிழகம், தமிழ்நாடு என்று வந்துள்ளது? 10 வருடங்களில் 4 முறை மொத்தம் ரூ.8 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு சிறப்பு நிதி வந்துள்ளது.

பாஜ ஆட்சிக்கு வந்ததும், 3 முறை தமிழகத்துக்கு சிறப்பு நிதியாக ரூ.1.05 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, கடந்த 2021–22ம் நிதியாண்டில் மட்டும் தமிழகத்துக்கு ரூ.1.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்-பட்டு, குறிப்பாக சாலை திட்டங்களுக்கு செலவிடப்பட்டன. 

பட்ஜெட்டில் எல்லா மாநிலங்களின் பெயர்களையும் சொல்வது கிடையாது. ஆனால், எல்லா மாநிலங்களுக்கும் நிதி வரும். 2021–22ல் தமிழகத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டபோது, மற்ற மாநிலங்களின் பெயர் வரவில்லை. 

அது மட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.10.76 லட்சம் கோடி நிதி வந்திருப்பது எல்லோருக்கும் தெரியும். தமிழகத்தை பிரதமர் மோடி எப்போதும் புறக்கணிக்கவில்லை. புறக்கணிக்கப் போவதும் இல்லை. சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நடக்காது என்பது போல, தமிழகத்துக்கு நிதி வராது என்ற பொய்யை முதல்வர் சொல்கிறார். கடந்த 5 வருடங்களில் மாநிலங்களுக்கான வரி பங்கீடு ரூ.11.45 லட்சம் கோடியில் இருந்து ரூ.23.49 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியா வளர்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. 

எனவே, இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தென் தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை, மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி கேட்டு கோரிக்கை வைக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க