tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஆக.7– 

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில், பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, மாநில மீனவர் அணித் தலைவர் முனுசாமி, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தனர். 

அப்போது, அமைச்சர், வெளியுறவுத் துறை செயலர், மீன்வளத் துறை அதிகாரிகள் ஆகியோரிடம் ராமநாதபுரம் பகுதியில் சமீபத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மீனவர்களின் குறைகள் எடுத்துரைக்கப்பட்டது. 

மேலும், சர்வதேச ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படைப் படகு மோதலால் இறந்து போன ஒரு மீனவர் மற்றும் காணாமல் போயிருக்கும் மீனவர் குறித்து விளக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்கக்கூடாது. அதேபோல, இந்திய – இலங்கை மற்றும் இந்திய மீனவ பிரதிநிதிகள் சந்திப்பை இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். 

அதற்கு அமைச்சர், ‘இலங்கைத் தூதரை வரவழைத்து இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறக்கூடாது என்று கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளேன். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் 273 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 204 பேர் தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். மீதியுள்ள 69 மீனவர்களில் 61 பேர் சிறையில் உள்ளனர். 8 பேர், தண்டனைக் கைதிகளாக இருக்கிறார்கள். இதுதவிர, 3 விசைப்படகு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. எல்லாரும் தமிழகத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்படுவார்கள். மீனவர் நலன்களை பாதுகாக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் முனைப்புடன் இருக்கிறது. மீனவர்கள் குறைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் காணாமல் போன மீனவரை விரைவாக கண்டுபிடிப்பதற்காக இந்திய மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் துணையோடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார். 

+++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க