tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, மே 14

தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.

இந்த வழக்கை அடுத்த மாதம் 27-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்தார்.

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற தேர்தலையொட்டி மத்திய சென்னை தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கம் டாணா தெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடுபவர், பணம் படைத்தவர். இந்த தேர்தலைப் பொறுத்தவரை, ஜனநாயகத்துக்கும் பணநாயகத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல். நமது வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுபவர் மிகப்பெரிய கோடீஸ்வரர். இந்தியாவில் விரல் விட்டு எண்ணப்படக்கூடிய கோடீஸ்வரர்களில் அவரும் ஒருவர்.

அவர்களிடம் பணமும், அதிகாரமும் இருக்கிறது. திமுக வேட்பாளர் அவருடைய சொந்த நலனுக்காக தேர்தலில் போட்டியிடுகிறார். அவருடைய சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், மேலும், சொத்துக்களை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவும் அவர் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், தன்னுடைய நாடாளுமன்ற மேம்பாட்டு உறுப்பினர் நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை எண்ணி பாருங்கள்.” என்று பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தயாநிதி மாறன் எம்.பி., எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவதூறு வழக்கை தொடர்ந்து இருந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்,

"அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எந்த ஆதாரங்களும் இல்லாமல் என் மீது அவதூறு பரப்பி உள்ளார். இதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக 24 மணி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டிருந்தேன்.மன்னிப்பு கேட்காததால் எடப்பாடி பழனிசாமி மீது கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட் தர்மபிரபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முதல் விசாரணை என்பதால் எடப்பாடி பழனிசாமி இன்று கோர்ட்டில் நேரில் ஆஜராகி வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொண்டார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் வக்கீல் ஐ.எஸ். இன்பதுரை ஆஜரானார்.

எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டிருந்தனர். மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், வேளச்சேரி அசோக், காஞ்சிபுரம் தொகுதி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், டாக்டர் சுனில், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டரகள் பெருமளவில் திரண்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஜூன்) 27-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக வக்கீல் இன்பதுரை அளித்த பேட்டி வருமாறு:-

மத்திய சென்னை தொகுதியின் தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜரானார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க