tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை, ஏப். 28

திருமங்கலம் தொகுதியில் உள்ள டி. குன்னத்தூர், கல்லுப்பட்டி,பேரையூர் ஆகிய இடங்களில் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கிணங்க நீர் மோர் பந்தலை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமா திறந்து பொதுமக்களுக்கு இளநீர், சர்பத், தர்பூசணி, மோர் ஆகியவற்றை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

தமிழகத்தில் வெப்பச்சனத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் வண்ணம் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு மாதமாக தமிழகத்தில் வெப்பச்சலனம் அதிகரித்து வருகிறது இதனால் மக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். ஆனாலும் அரசு தற்போது தான் விழித்துக் கொண்டு 22 மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்காக 150 கோடியை முதலமைச்சர் ஒதுக்கி உள்ளார். இதன் மூலம் தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக உள்ளது மழை நீரை சேமிக்க அரசு தவறிவிட்டது.

எடப்பாடி ஆட்சியில்

நீர்நிலை சீரமைப்பு

எடப்பாடியார் ஆட்சியில் 1,332 கோடியில் 5,586 நீர் நிலைகளை சீரமைப்பு செய்தோம். கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த குடிமராமத்து திட்டத்தை அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போட்டுள்ளனர். அதேபோல் நதி நீர் இணைப்பு திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளனர். குறிப்பாக தென் மாவட்ட மக்களின் நூறாண்டு கனவு திட்டமான காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை 14,400 கோடி மதிப்பில் மத்திய அரசு நிதி இல்லாமல் எடப்பாடியார் மாநில அரசு நிதியிலிருந்து திட்டத்தை துவக்கினார் அதுவும் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் போன்ற வடகிழக்கு பருவ நிலையில் நமக்கு தேவையான நீர் கிடைக்கும் ஆனால் அதை சேமித்தால் இன்றைக்கு 22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது, 150 கோடி நிதியும் தேவைப்பட்டு இருக்கிறார் இதற்கு யார் காரணம்? மத்திய அரசு நிவாரண நிதி வழங்குவதில் ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு வைத்து வருகிறது. தமிழகத்திற்கு 38,000 கோடி தேவைப்படுகிறது ஆனால் 276 கோடியை வழங்கிவிட்டு, கர்நாடகாவிற்கு 3,454 கோடியை வழங்கி உள்ளது. இதே போன்று தான் மத்தியில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியிலும் இதே நிலைதான் தமிழகத்தில் நீடித்தது.

முதலமைச்சர்

வாய் மூடி உள்ளார்

மத்திய அரசுக்கு கொடுக்க மனமில்லை, அதைப் பெற்றுத் தர மாநில அரசுக்கும் மனமில்லை தற்போது யார் என்று வாக்கு வாங்கி யுத்தம் தான் நடக்கிறது. தேசிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தின் நலனை புறக்கணிக்கின்றன, வாக்கு வங்கிக்காக மாநில உரிமைகள் காவு கொடுக்கப்படுகிறது, ஆனால் கூட்டணி தர்மம் என்று மாநில கட்சி நியாயம் கற்பிக்கின்றனர். கர்நாடகாவில் அணைக்கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது, ஆனால் முதலமைச்சர் வாய் மூடி கூட்டணி தர்மம் என்கிறார். அதேபோல் முல்லைப் பெரியாரில் கேரளா அரசு அணைக்கட்டு முயற்சிக்கிறது ஆனால் முதலமைச்சர் அதை தட்டிக் கேட்க திராணியில்லாமல் கூட்டணி தர்மம் என்று வாய் மூடி உள்ளார். கூட்டணி தர்மம் என்று அடையாளம் காட்டி மக்கள் உரிமை காவு கொடுக்கப்படுகின்றன, அதனால் தான் மக்களை நம்பி தமிழகத்தின் உரிமை மீட்க எடப்பாடியார் தேசிய கட்சிகளை புறகணித்துள்ளார்.

தமிழகத்தின் 39 இடங்களில் வெற்றி பெற்றால் தான் மத்தியில் அதிகாரத்தை செலுத்த முடியும், மெட்ரோ ரயில் திட்டத்தில் கூட இரண்டாம் கட்ட பணிகளுக்கு ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை அதை பெற்றுத்தர கையால அரசாக திமுக அரசு உள்ளது. தேர்வில் மாணவர்கள் நன்றாக எழுதினால்தான் ஆசிரியர் மதிப்பளிப்பார், ஆனால் தேர்வு சரியாக எழுதாமல் ஆசிரியரின் மீது பழியை போடக்கூடாது, அதேபோலத்தான் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காமல் மாநில அரசு, மத்திய அரசு மீது பழி போடுகிறது. 2001 அம்மா ஆட்சிக்காலத்திலும் சரி, 2019 எடப்பாடியார் ஆட்சிக் காலத்திலும் சரி குடிநீர் பற்றாகுறை ஏற்பட்டபோது ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் மூலம் தண்ணீரை வந்து சேர்த்தார்கள்.

மாற்றான்தாய்

மனப்பான்மையுடன்...

இன்றைக்கு மத்திய அரசு தமிழகத்தை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கதையாக தமிழக மக்களை வஞ்சிக்கிறது. தேசிய கட்சிகள் தமிழகத்தின் மீது அக்கறை செலுத்தவில்லை என்று எடப்பாடியார் சொல்லிக் கொண்டு வருகிறார். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு என்றால் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வந்தால் தான் தீர்வு காண முடியும் அதை மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே மாணிக்கம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராமசாமி,கொரியர் கணேசன், மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி, கழக மாணவரணி துணைச் செயலாளர் முத்து செல்வம், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் சரவண பாண்டி, முன்னாள் சேர்மன் மாணிக்கம், மாவட்ட கலைபிரிவு செயளாலர் சிவசக்தி மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க