tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தூத்துக்குடி, ஜூலை 13

சீமான் நாக்கை அடக்க வேண்டும் என்று அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்துள்ளார்.

தமிழக அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியது: 

 கலைஞரைப் பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இழிவாகவும், அவதூறாகவும் பேசியதை திமுக வன்மையாக கண்டிக்கிறது.

 எங்கள் தலைவர் கலைஞர் இறக்கும் போது சீமான் அவரை பற்றி புகழ்ந்தார். ஆனால், தற்போது தேவையில்லாமல் பேசி வருகிறார். கோடானு கோடி தொண்டர்கள், தலைவரின் கண் அசைவிற்காக காத்திருக்கின்றார்கள். பொறுமையாக இருக்கின்றோம். சாட்டை துரைமுருகன் சாதிப்பெயரைச் சொல்லி இழிவாக பேசுகிறார். அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கருத்துரிமை பறிக்கப்படுவதாக கூறுகின்றார் சீமான்.

நாக்கை அடக்கு...

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தேவன் பிள்ளை இல்லை என்றும், சாத்தான் பிள்ளைகள் என்றும் கூறுகின்றார். தூய்மைப் பணியாளர்களை தெலுங்கர் என்று கூறுகின்றார் சீமான், இதை தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. சீமான் மனநிலையை அவர் சோதிக்க வேண்டும். பெண் காவலர்களையும், உயர் அதிகாரிகளின் தவறான முறையில் சவுக்கு சங்கர் பேசினார். இதற்கு பெண் காவலர்கள் புகார் கொடுத்து இருக்கின்றனர். அதற்கு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. பெண் காவலர்களை தவறாகச் சொன்னவர்களை இவர் ஏற்றுக்கொள்கின்றாரா?. கருத்துரிமை பறிக்கப்படுவதாக அவர் கூறுகிறார். தனிப்பட்ட முறையில் தவறான சொற்களை உபயோகப்படுத்தி பேசி பிரச்னை உண்டாக்கி, சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகின்றார்.

 

சீமான் அவருடைய கட்சிக்கு இலங்கை தமிழர் பிரச்னையை முன்னிறுத்தி உலக அளவில் பல்வேறு வகையில் நன்கொடை பெற்று வருகிறார். இலங்கையில் எப்படி ராஜபக்சேயை எதிர்க்கின்றானரோ, அதே போன்று தமிழகத்தில் திமுகவை எதிர்க்க வேண்டும் என்று காட்டிக்கொள்வதற்காக திமுகவையும், திமுக தலைவர்களையும் அவர் பேசி வருகிறார். 

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும். அரசியல் அரைவேக்காடு தனமாக பேசக்கூடாது. அரசியல் முதிர்ச்சியில்லாத ஒரு தலைவராக அவர் தெரிகிறார். தமிழ் சமூகத்தை தவறான தகவல் மூலம் தவறாக வழிநடத்தி வருகிறார் என்பதை கூறிக் கொள்கின்றேன். பச்சோந்தி போல இன்று ஒன்று, நாளை ஒன்று என பேசி வருகிறார். தான் பேசியது என்னவென்று தெரியாமல் அவர் பேசி வருகின்றார்.

அரசியல் தலைவருக்கு அவர் தகுதியானவர் அல்ல, அரசியல் பண்பற்றவர். தரமில்லாத ஒரு அரசியல் நடத்தி வருகிறார். எங்கள் தலைவரைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு அருகதை இல்லை. மேலும், சீமான் மீது புகார் அளித்தல் நடவடிக்கை எடுப்போம்.

பழனிசாமி

 கருத்துரிமை பறிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி என்று பாஜவா, நாம் தமிழர் கட்சியா என முன்னெடுத்து வருகின்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை. மக்கள் அவரை நிராகரித்து வருகிறார்கள்.

இவ்வாறு கீதா ஜீவன் கூறினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க