tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

போபால், மே 4-

நாட்டுக்குபணியாற்ற என்தந்தையை அனுப்பி வைத்தேன்.ஆனால் அவரை வெறும்சாம்பலாகத்தான் திருப்பிஅனுப்பினார்கள். இது தான் நாட்டுக்காக ராஜீவ்காந்தி செய்த தியாகம்.அவரைப்போய் துரோகி என்கிறார் பிரதமர்மோடி என்று பிரியங்கா உருக்கமாகப்பேசினார்.

 ம.பி.யில் காங்கிரஸ்பொதுச் செயலாளர் பிரியங்கா பிரசாரம் செய்து வருகிறார். அவர் பேசுகையில், ஆட்சியில் இருக்கிற கட்சியின் மதமே நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும் சேவை செய்வதாகவே இருக்க வேண்டும். இதுதான் நமது பாரம்பரியம். ஆனால் கடந்த பத்தாண்டு களாக மதத்தின்பெயரால் தான் ஓட்டுகளை பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறீர்கள்.

 எனது பாட்டி இந்திராகாந்தி எனக்கு எப்படி பூஜை செய்ய வேண்டும்என்று கற்றுக்ª காடுத்தார். என் தந்தை மறைந்த ராஜீவ் க காந்தியின் கரம்பிடித்து கோவிலுக்குச் சென்றேன்.இந்த பாரம்பரியங்களை எல்லாம் என் தாயார் இந்த நாட்டில் இருந்து கற்றுக் கொண்டார். இந்து மதம் என்பது வாய்மை. நாட்டின் முழக்கமே... “வாய்மையே வெல்லும்“ என்பதுதான். இதை இதயபூர்வமாக நாம் அறிவோம்.

ஆனால் ஆளுகிறஇந்த அரசு குடிமக்களுடன் விளையாடுகிறது. உங்களது தாலிகளை எல்லாம் காங்கிரஸ் திருடிவிடும்என்கிறார் பிரதமர். இது நம்பத்தகுந்ததா? 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. பெண்களின் தங்கத்தாலிகளை காங்கிரஸ் திருடியதா? மேடை கிடைத்து விட்டால் போதும்.காங்கிரஸ்மீது பழிசுமத்துவதே பிரதமரின் வேலையாகி விட்டது. பத்தாண்டுகள் செய்த சாதனகைளை அவர் சொல்வதே இல்லை.இருந்தால் தானே சொல்வதற்கு...? என்தந்தையை துரோகி என்கிறார். தாயின்சொத்துக்களை மீட்கவே பரம்பரை வரியை நீக்கியதாக சொல்கிறார். பரம்பரை வழியில் எந்த சொத்தும் என் தந்தையார் பெறவில்லை. தியாகிகள்பற்றிய எண்ணங்களை மட்டுமே அவர் பெற்றார். 

 நாட்டுக்காகவே என் தந்தையை அனுப்பி வைத்தேன்.அவரது பாதுகாப்புக்கு நீங்கள் தானே உத்தரவாதம்.உங்களிடம்அவரை ஒப்படைத்தேன்.ஆனால் அவரை வெறும் சாம்பலாக தேசியக்கொடியில் சுற்றித்தான் திருப்பித்தந்தீர்கள். தியாகம் என்றால் என்ன என்பது எனக்குத் தெரியும்.இப்போது எனக்கு 52 வயது. இதுபற்றி இப்போது தான் நான் பொது வெளியில் பேசுகிறேன்.

 புல்வாமாவில் 40 வீரர்கள் உயிரிழந்தார்கள். உ.பி.யில் உள்ள ஒரு சில வீரர்களின் வீடுகளுக்குச்சென்றேன். அந்ததியாகிகளின் பிள்ளைகள் எல்லாம் ராணுவத்தில்சேர வேண்டும் என்றார்கள். ஒரு பெண் குழந்தையோ.... அக்கா நான் விமானப்படையில் சேர்ந்து பைலட்ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டது. இது தான் தியாக உணர்வு. இதை எல்லாம் மோடி ஒருபோதும்உணரவே மாட்டார். அவருக்கு தெரிந்தது எல்லாம்வாரிசு அரசியல். நாட்டுப்பற்று, நாட்டுக்கான சேவை பற்றிஎல்லாம் அவர் பார்க்கவே மாட்டார்.

இவ்வாறு பிரியங்கா பேசினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க