tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, மே 15

ஹிந்து, முஸ்லிம் என அரசியல் செய்ய மாட்டேன். இது எனது தீர்மானம்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் பின்னர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார்.

நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் பற்றி நான் பேசிய ஒரு பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நான் இஸ்லாமியர்களை மட்டும் குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை. ஆனால் நான் அப்படி பேசியதாக ஒரு தகவல் பரப்பப்பட்டுள்ளது.

நான் சொன்னது என்ன?

முஸ்லிம்கள் பற்றி நான் தவறாக பேசியதாக பரவிய தகவல் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் பற்றி நான் பேசினால் அது முஸ்லிம்கள் பற்றி பேசியதாக உங்களுக்கு யார் சொன்னது. நான் அப்படி பேசியது நாட்டில் உள்ள ஏழை மக்கள் பற்றியதாகும்.எங்கு அதிக வறுமை இருக்கிறதோ அங்கு அதிக குழந்தைகள் இருக்கிறார்கள். இதைதான் நான் குறிப்பிட்டு பேசினேன்.

அதை தவறாக புரிந்து கொண்டு இஸ்லாமியர்கள் பற்றி நான் பேசியதாக அநீதி இழைப்பது ஏன்?

வாக்கு வங்கி அரசியலா?

நான் ஒரு போதும் வாக்கு வங்கி அரசியலுக்காக செயல்படுவது இல்லை. நான் மத ரீதியாக பேச தொடங்கினால் நான் பொது வாழ்க்கையில் இருப்பதற்கு தகுதி இல்லாதவன் ஆகி விடுவேன். நான் ஒருபோதும் அப்படி செயல்படுவது இல்லை.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து நிகழ்ந்த மிகப் பெரிய கலவரம் உங்களுக்கு தெரிந்து இருக்கும். அப்போது நான் குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்தேன். கோத்ரா கலவரத்துக்கு பிறகு எதிர்க்கட்சிகளால் எனது தனி மரியாதை, இமேஜ் திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டது.

என்னை இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் போல சித்தரிக்கிறார்கள். எனது வீட்டை சுற்றி அதிக அளவில் இஸ்லாமியர்கள் தான் வசிக்கிறார்கள். இஸ்லாமியர்களின் பண்டிகை நாட்களில் எங்களுடைய வீட்டில் உணவு சமைக்கப்படுவது இல்லை. அவர்கள் வீட்டில் இருந்து எங்களுக்கு உணவு வந்து விடும்.

முஸ்லிம்கள் தரும் விருந்து

எங்கள் வீட்டை சுற்றி இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் எங்களுக்கு அடிக்கடி விருந்து தருவார்கள். அவர்களோடு ஒருங்கிணைந்துதான் நான் வாழ்ந்தேன். எனது சிறு வயது வாழ்க்கை அப்படித் தான் அமைந்து இருந்தது.

இப்போது கூட எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பிறகு என் மீதான இமேஜ் மாற்றப்பட்டு விட்டது.

இஸ்லாமியர்களில் பெரும்பாலானவர்கள் என்னை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் எனக்காக வாக்களிப்பார்கள். நான் மத ரீதியாக பேசவில்லை என்பது அவர்களுக்கு புரியும்.

நான் இந்து, முஸ்லிம் பற்றி பேசுவது இல்லை. இதனை எனது வாக்குறுதியாகவே மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஓட்டு வங்கி அரசியலுக்காக பணியாற்ற மாட்டேன். ஏதாவது தவறு நடந்தால், அதனை தவறு என சொல்லிவிடுவேன். அனைவரின் வளர்ச்சி; ஒவ்வொருவரின் வளர்ச்சி ' என்பதே எனது தாரக மந்திரம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க