tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, மே 4 -

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில், ஏவியவர்களை விட்டு விட்டு வெறுமனே அம்பை தண்டித்திருக்கிறார்கள் என்றும் பின்புலமாக இருந்த கயவர்களையும் தண்டிக்க வேண்டும் என்பதால், வழக்கை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அண்ணா தி.மு.க, தே.மு.தி.க, பாரதீய ஜனதா கட்சி ஆகிய கட்சிகளில் இருந்து, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விலகி, நூற்றுக்கணக்கானோர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளனர். மேலும் அவர்கள் முன்பிருந்த கட்சியில் வகித்த பதவி, உறுப்பினர் அட்டைகளையும் எங்களிடம் வழங்கியுள்ளனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

நிர்மலா தேவி வழக்கை

மறு ஆய்வு செய்ய வேண்டும்

மேலும் அவர் கூறும் போது, தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்களில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது உதவி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை மிரட்டி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற வழக்கில் நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனை வழங்கியுள்ளது. ஆனால் நிர்மலா தேவி யாருக்காக பெண்களை மிரட்டினார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

ஒரு கொலை நடந்தால், கொலை செய்தவனுக்கு இணையாக, தூண்டி விட்டவருக்கும் தண்டனை வழங்கப்படுவது குற்றவியல் நடைமுறை. அப்படி இருக்கும்போது பேராசிரியை நிர்மலா தேவி யாருக்காக கல்லூரி பெண்களை அழைத்தார். யார் யாருடன் எல்லாம் பேசினார். அவருக்கு பின்புலமாக இருந்த பெருந்தலைகள் யார்? என்பதையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டியது அவசியம்.

ஆனால் முன்பிருந்த ஆட்சியாளர்கள் நிர்மலாதேவியை மட்டும் கூண்டில் நிறுத்தி நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறார்கள். உண்மையான குற்றவாளிகள் தப்ப விடப்பட்டுள்ளனர். எனவே இந்த வழக்கை மறு ஆய்வு செய்து, நிர்மலா தேவியின் செயல்களுக்கு காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் நாடாளுமன்றத்திற்கான 2 கட்ட தேர்தல்களில் இட ஒதுக்கீடு, தாலி, எருமை என்ஆர்சி என எதையெதையோ மோடி பேசினார். ஆனால் எதுவும் மக்களிடம் எடுபடவில்லை என்பதால், இப்போது பாகிஸ்தான் குறித்து மோடி பேசி வருகிறார். ஆனால் சர்வதேச குற்றவாளிகள் மூன்று பேரை ஆப்கானிஸ்தானின் கந்தகருக்கு அனுப்பி வைத்தது யாருடைய ஆட்சி? அதேபோல் பாராளுமன்ற தாக்குதல் நடைபெற்ற பிறகு பாகிஸ்தான் உடன் உறவு இல்லை என்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். அதனை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் கடைபிடித்தார் என்பதை மறந்து விடக்கூடாது.

மோடியின் பொய், புரட்டுகள்

ஆனால் மோடி ஆட்சியில் கார்கில் பகுதியில் நடந்த அத்துமீறல் கூட, ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் மூலமாக தான் வெளியானது. அதேபோல் மோடி திடீரென ஒரு நாள் பாகிஸ்தான் சென்று மதிய உணவு அருந்தினார். வெளியுறவுத் துறை செயலாளர், அமைச்சர் யாருக்கும் தெரியாமல், எந்தவித திட்டமிடலும் இல்லாமல், பாகிஸ்தானுக்குச் சென்று மதிய உணவு அருந்தியவர் தான் மோடி. எனவே அவர் பாகிஸ்தானை காங்கிரசோடு இணைத்து பேசுவது அர்த்தமற்றது. பாகிஸ்தான் உடன் நடந்த போரில் 2 முறை வெற்றி கண்டது காங்கிரஸ் ஆட்சியில் தான் என்பதையும் மோடி மறந்துவிடக்கூடாது.

இப்படி மோடி தினம் தினம் அவதூறுகளை கூறி வருகிறார். அவருடைய பொய் புரட்டுகள் விரைவில் முடிவுக்கு வரும். ராமன், கிருஷ்ணன், கையில் எடுத்து மோடி பேசினார். ஆனால் அதற்கு மக்களிடம் பெரிய வரவேற்பு இல்லை. எனவே இப்பொழுது மதவாத அரசியல், அந்நிய நாடுகள் என்று எடுத்துக் கொண்டு பேசி வருகிறார். மூன்றாம் கட்ட தேர்தலில் என்ன பேசப் போகிறார் என்று தெரியவில்லை.

இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

மேலும் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சடலமாக மீட்கப்பட்ட செய்தி சற்று முன்பு தான் தெரியவந்தது. இப்பொழுது நான் நெல்லைக்குச் சென்று, அது குறித்து விசாரித்து விவரங்களை செய்தியாளர்களிடம் பின்னர் தெரிவிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் பொருளாளர் ரூபி ஆர். மனோகரன், பொதுச் செயலாளர் எஸ்.ஏ. வாசு, துணைத்தலைவர் கோபண்ணா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க