tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூலை 6–

 சென்னையில் 'ஊரும் உணவும்' என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா 3 நாள் நடக்கிறது. ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள செம்மொழி பூங்காவில் இந்த உணவு திருவிழாவை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி நேற்று தொடங்கி வைத்தார். அங்குள்ள ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட வேண்டும் என புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்றுக்கொண்டு கனிமொழி, கலாநிதி வீரசாமி எம்.பி. ஆகிய இருவரும் ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட்டனர்.

 

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது: 

இந்த உணவுத் திருவிழாவின் முக்கிய நோக்கம் நாட்டிலுள்ள புலம் பெயர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தான் வெளி இடங்களில் இருந்து புலம் பெயர்ந்து இந்தியா வந்த மக்கள் தற்போது வரை ஒரு சில சவால்களை சந்தித்து வருகின்றனர். மத்திய அரசிடம் குடியுரிமை வேண்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

 

 நீட் தேர்வு வேண்டாம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தற்போது தான் மற்ற மாநிலங்களில் இருந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு குரல்கள் வரத் தொடங்கியுள்ளது. நீட் தேர்வு குறித்து மற்றவர்களும் உணர்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த வேளையில் தொடர்ந்து திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும். நீட்டிலிருந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய கடமை அத்தனை பேருக்கும் உள்ளது.

நடுநிலை இல்லை

ஒரு நாள்கூட அவர்களால் சபையை நீட்டித்து நடத்த முடியவில்லை. நிச்சயமாக அவர்களால் நடத்தி இருக்க முடியும். ஆனால் அரசாங்கம் முன்வரவில்லை. மணிப்பூர் குறித்தும் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை. நாடாளுமன்ற மரபுகளின் படி பிரதமர் உரையின் மீது எதிர்க்கட்சித் தலைவர் குறுக்கிட எழுந்து நின்றால் நிச்சயம் அனுமதிக்கப்படுவார். ஆனால் தற்போது முதல் முறையாக அதற்கு அனுமதி இல்லை. எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும் பொழுது யார் வேண்டுமானாலும் குறுக்கிடலாம், ஆனால் ஆளும்கட்சி உறுப்பினர்கள் பேசும் பொழுது யாருக்கும் குறுக்கிட உரிமை இல்லாத நிலைதான் இருக்கிறது.

 

*நீட் தேர்வு ரத்து குறித்து தமிழக அரசின் தீர்மானத்தை நடிகர் விஜய் வரவேற்கும் வகையில்பேசி இருக்கிறாரே?

 நீட் தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வரவேற்கும் நடிகர் விஜயின் கருத்தை நானும் வரவேற்கிறேன்.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க