tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூலை 7–

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் தாக்கல் செய்த அபிடவிட்டில், ‘நீட் தேர்வில் நாடு முழுவதும் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. எனவே, மறுதேர்வு நடத்த தேவையில்லை. ஒரு சில இடங்களில் நடந்த முறைகேடுகளுக்காக ஒட்டுமொத்தமாக தேர்வை ரத்து செய்வது, நேர்மையான மாணவரைப் பாதிக்கும்’ என்று தெரிவித்துள்ளது.

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மே 5ம் தேதி நடந்தது. ஜூன் 5ல் முடிவு வெளியானது. அதன்பின், ஒரு சில தேர்வு மையங்களில் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் விநியோக தாமதம் போன்ற குளறுபடிகள் நடந்ததாகவும், சில இடங்களில் வினாத்தாள் லீக் ஆனதாகவும் புகார்கள் வந்தன. ஐகோர்ட்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கு நிலவரம்

 சில மாநிலங்களின் ஒரு சில இடங்களில் வினாத்தாள் லீக் நடந்ததாக வந்துள்ள புகார்களில் சிபிஐ விசாரணை அறிவிக்கப்பட்டு, கைது, கஸ்டடி தொடங்கியிருக்கிறது. இந்த நடவடிக்கைகளால் கருணை மதிப்பெண் எதிர்ப்பு மனுக்கள் மற்றும் சிபிஐ விசாரணை கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்தது.  

மே 5ல் நடந்த நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரும் மனுக்கள், விடைத்தாள் மறுமதிப்பீடு கோரும் மனுக்கள், மறுதேர்வு எதிர்ப்பு மனுக்கள் ஆகியவை, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பெஞ்சில் ஜூலை 8ம் தேதி முதல் இணைத்து விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நிலைப்பாடு

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் கல்வி் அமைச்சகம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:

* இந்த ஆண்டில் நடந்த நீட் தேர்வின் போது, ஒரு சில இடங்களில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் லீக் போன்ற முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்துள்ளன. அவை குறித்து விரிவான விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் உள்ளிட்ட தேசிய தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தேவையான பரிந்துரைகளைப் பெற, நிபுணர்கள் கொண்ட மேல்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.

* பொதுத்தேர்வுகளில் வினாத்தாள் லீக் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வழிவகை செய்யும் பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டம், ஜூன் 21ம் தேதி முதல் அமலாக்கப்பட்டுள்ளது.

* நீட் தேர்வில் நாடு முழுவதும் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. ஒரு சில இடங்களில் நடந்த முறைகேடுகளுக்காக ஒட்டுமொத்தமாக தேர்வை ரத்து செய்வது, நேர்மையான முறையில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற பெரும்பாலான மாணவர் நலனை கடுமையாகப் பாதிக்கும். எனவே, மறுதேர்வு நடத்த தேவையில்லை.

* இந்த அபிடவிட், முதல்கட்ட பிரமாணப் பத்திரம்தான். விரிவான அபிடவிட், பின்னர் தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு மத்திய கல்வி அமைச்சக அபிடவிட்டில் கூறப்பட்டுள்ளது.

++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க