tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை,ஜூன் 12–

போலீ­சு­க்கு எதி­ராக நீதி­பதி சுவாமி­நாதன் பார­பட்சம் காட்டி உள்ளார். அவ­சர­மாக பிறப்­பித்த அவ­­ரது உத்­த­ரவு 

சரி­யா­ன­தல்ல என்று சவுக்­கு­சங்கர் வழக்­கில்­மூன்­றா­வ­து­நீ­தி­பதி தீர்ப்­ப­ளித்­துள்­ளார்.

 

யூ டியூப்பர் ‘சவுக்கு’ சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சிறையில் அடைத்தார். 

இதை எதிர்த்த சவுக்கு சங்கர் தாயார், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை, ஐகோர்ட் கோடை விடுமுறை 

கால நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பாலாஜி ஆகியோர் அவசரமாக விசாரித்து இரு வேறு தீர்ப்பு கூறினர்.

 குண்டர் தடுப்பு சட்டத்தில் சங்கரை சிறையில் அடைத்த போலீஸ் கமிஷனர் உத்தரவை ரத்து செய்து, நீதிபதி 

சுவாமிநாதன் தீர்ப்பு கூறினார். போலீசில் பதில் பெறாமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிபதி பாலாஜி தீர்ப்பு 

கூறினார். 

இதனால் 3வது நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்து, ஏற்கனவே சுவாமிநாதன் உத்தரவை ஏற்க முடியாது என்று தீர்ப்பு 

கூறினார். நேற்று இதில் விரிவான தீர்ப்பு வெளியானது. அதில், நீதிபதி ஜெயசந்திரன் கூறியிருப்பதாவது:

நீதிபதி சுவாமிநாதன், டிவிஷன் பெஞ்சில் உள்ள சக நீதிபதி பாலாஜியை கலந்தாலோசிக்காமல் அவசரமாக 

உத்தரவுகளை பிறப்பிப்பதில் ஆர்வம் காட்டுவதன் மூலம் மாநில போலீசுக்கு எதிராக ஒரு பாராபட்சத்தை 

காட்டியுள்ளார் என்று தெரிகிறது. சவுக்கு சங்கர் வழக்கில், நீதிபதி சுவாமிநாதன் அவசர அவசரமாக உத்தரவு 

பிறப்பித்துள்ளார். “லத்தீன் மாக்சிம், ஆடி ஆல்டெரம் பார்டெம்’ (எந்தவொரு நபரையும் நியாயமான விசாரணையின்றி 

தீர்ப்பளிக்கக்கூடாது) என்பது சட்டக் கல்லுாரிகளில் கற்பிக்கப்படும் முதல் பாடமாகும். எந்தவொரு நபரும் 

நியாயமான விசாரணையின்றி தீர்ப்பளிக்கப்படக்கூடாது, என்று லத்தின் வாசகம் உள்ளது. இந்த வழக்கில் இது 

பயன்படுத்தப்படவில்லை, ஏனெனில் இந்த வழக்கு அவசரமாக பட்டியலிடப்பட்டது. இதனால் போலீசுக்கு 

குறைவான அவகாசம்தான் கிடைத்துள்ளது. போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியபோது, 

போலீசுக்கு வாய்ப்பளிக்காதது, பாரபட்சம் காட்டுவதுபோல உள்ளது. போலீஸ் பதில் அளிக்க நீதிபதி பாலாஜி சரியான 

வாய்ப்பு அளித்துள்ளார். இதை ஏற்கிறேன்.

நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பில் இரண்டு ‘உயர்ந்த பதவியில் உள்ள நபர்கள்’ அவரை நேரில் சந்தித்து வழக்கை 

விசாரிக்க வேண்டாம் என்று கேட்டதால் வழக்கை உடனே விசாரித்து தீர்ப்பு கூறினேன் என்று கூறியுள்ளார். நீதிபதி 

சுவாமிநாதன் கூறிய கருத்து வருத்தம் அளிக்கிறது. போலீசுக்கு வாய்ப்பை மறுப்பதற்கு அவரைத் தூண்டிய காரணங்கள் 

மிகவும் கவலையளிக்கின்றன.

 2 பேர் சந்தித்தனர் என்று கூறிவிட்டு வழக்கில் இருந்து நீதிபதி சுவாமிநாதன் விலகி இருக்க வேண்டும்.

அரிதாக ஒரு நீதிபதிக்கு, கடமையை நிறைவேற்றும்போது இதுபோல ஒரு விஷயம் நடக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு 

நடந்தாலும் நீதிபதி, அதை தலைமை நீதிபதியிடம் புகாரளித்திருக்கலாம். அல்லது நீதி நிர்வாகத்தில் தலையிட்டதற்காக 

மற்றும் அல்லது வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகியதற்காக நடவடிக்கை எடுப்பார்கள் என்று இந்த 

நீதிமன்றத்தின் கடந்தகால வரலாறு கூறுகிறது. இதை நீதிபதி சுவாமிநாதன் பின்பற்றவில்லை. எனவே அவர் கூறிய 

தீர்ப்பை ஏற்கமாட்டேன். இந்த வழக்கை வேறு இரு நீதிபதிகள் விசாரணைக்கு அனுப்பி வைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.  

==

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க