tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

உத்தரகண்ட், ஏப். 30

பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதித்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் உத்தரகண்ட் அரசு பதிலளித்துள்ளது.

மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி, கொரோனா தடுப்பூசி திட்டம் ஆகியவவை குறித்து தவறான கருத்துகளைத் தெரிவித்ததாக யோகா குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் மீது, இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, எந்தவொரு மருத்துவ முறைக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது எனவும், மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்றும் பதஞ்சலி நிறுவனத்துக்கு கடந்த நவம்பரில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்று கேள்வி எழுப்பி, கடந்த பிப்.27-ஆம் தேதி பாபா ராம்தேவ், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவன நிர்வாக இயக்குநர் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.

அதனைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி இரண்டு முறை பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரியும், அதனை ஏற்காத உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அசானுதீன் அமானுல்லா இன்று 3வது முறையாக நேரில் ஆஜராக கோரி உத்தரவிட்டது.

அலோபதி மருத்துவம் குறித்து தவறான விளம்பரம் செய்த வழக்கில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு இன்று மீண்டும் நேரில் ஆஜரானார். இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த உத்தரகாண்ட் அரசின் மருந்து உரிமம் வழங்கும் ஆணையம், பதஞ்சலி நிறுவனம் மற்றும் அதன் இணை நிறுவனமான திவ்யா மருந்தகத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், பதஞ்சலி நிறுவனத்தின் மீதும், அதன் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் ஆயுர்வேத நிறுவன நிர்வாக இயக்குநர் பாலகிருஷ்ணா ஆகியோர் மீது குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. அதேபோல், பதஞ்சலி நிறுவனத்தின் மீது தாமதமாக நடவடிக்கை எடுத்ததற்கு நீதிபதி முன்பு நிபந்தனையற்ற மன்னிப்பையும் உத்தரகண்ட் அரசு கேட்டுள்ளது. கடந்த முறை விசாரணையின்போது பதஞ்சலி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்காததற்கு உத்தரகண்ட் அரசு மீது அதிருப்தி தெரிவித்திருந்த சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

தடை விதிக்கப்பட்ட மருந்துகள்: ஸ்வசாரி கோல்ட்ஸ்வசாரி வதிப்ரோஞ்சோம்ஸ்வ சாரி ப்ரவாஹிஸ்வசாரி அவளேமுக்தாவதி எக்ஸ்ட்ரா பவர்லிபிடோம்பிபி கிரிட்மதுக்ரிட்மதுநாஷினி வதி எக்ஸ்ட்ரா பவர்லிவாமிர்த் அட்வான்ஸ்லிவோக்ரிட்ஐகிரிட் கோல்ட்த்ரிஷ்டி கண் சொட்டு மருந்து.

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க