tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை, நவ.8

 கூட்டணிக்கு வந்தால், அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என்று கூறுவது, ஏதோ பதவிக்காக மற்ற கட்சிகள் அனைத்தும் ஓடிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களை இழிவுபடுத்துவது போல இருக்கிறது நடிகர் விஜய் அறிவிப்பு,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பாலகிருஷ்ணன் கூறியதாவது: “நிறைய பேர் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளனர். நடிகர் விஜய் மட்டும்தான் கட்சி தொடங்கினார் என்று கூற முடியாது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நிறைய பேர் கட்சி ஆரம்பித்தனர். இதைவிட பிரம்மாண்டமான விழாக்கள் எல்லாம் அப்போது நடந்ததை நாம் பார்த்திருக்கிறோம். நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும்போது, இதைவிட கூட்டம் பலமடங்கு அதிகமாகவே இருந்தது.

எனவே, புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கிவிட்டதால், அவர்கள் என்ன சொல்கிறார்கள், என்பது குறித்து நாங்கள் பதில் சொல்ல வேண்டிய தேவை கிடையாது. நாளை அவை நடைமுறைக்கு வரும்போது, அதுகுறித்து எங்களுடைய கருத்தைக் கூறுவோம்.

சலசலப்பு இல்லை

நிச்சயமாக விஜய்யின் வருகையோ அவருடைய அறிவிப்புகளோ நிச்சயமாக திமுக கூட்டணிக்குள் எந்தவிதமான சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. அதுதொடர்பாக ஏற்பட்ட பல்வேறு விதமான சந்தேகங்களை, சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுபடுத்திவிட்டனர். இவ்வாறு நான் கூறுவதால், திமுக அரசுடன் கருத்து வேறுபாடுகளே ஏற்படவில்லை என்று நான் கூற விரும்பவில்லை.

எங்களைப் பொருத்தவரையில், மக்களுக்கான கோரிக்கைகளை நாங்கள் கேட்கத்தான் செய்வோம். திமுக அரசுடன் கூட்டணியில் இருப்பதால், சாம்சங் பிரச்சினையை நாங்கள் விட்டுக்கொடுத்துவிட முடியுமா? கூட்டணியில் இருப்பதால், நிலங்களைக் கையகப்படுத்துவதை நாங்கள் ஏற்க முடியுமா? எனவே அந்தப் போராட்டம் என்பது தொடரும். அது திமுகவோ அல்லது வேறு கட்சியோ யார் ஆட்சியில் இருந்தாலும் அதை தொடரத்தான் செய்வோம்.அதேநேரத்தில் பாஜக என்கிற மதவெறி அரசாங்கம், ஆட்சியை எதிர்த்து நாங்கள் நிச்சயமாக இணைந்துவிடுவோம். 

மேலும், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று விஜய் அறிவித்திருப்பதற்கான காரணத்தை அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் அறிவிப்புக்கு நான் எப்படி பதில் அளிப்பது? அதிகாரத்தில் பங்கு கொடுப்பதாக அறிவித்தால், வேறொரு கூட்டணியில் இருப்பவர்கள் வருவார்கள் என்று நினைப்பதே தவறு. ஒரு கொள்கையை அறிவித்து அந்த கொள்கைக்காக இணையும்படி அழைப்பது வேறு.

எங்களது ஆட்சியில் இந்த கொள்கைகள், திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று அறிவிப்பது வேறு விஷயம். நீங்கள் கூட்டணிக்கு வந்தால், அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என்று கூறுவது, ஏதோ பதவிக்காக மற்ற கட்சிகள் அனைத்தும் ஓடிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களை இழிவுபடுத்துவது போல அல்லவா இருக்கிறது, அந்த அறிவிப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க