tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தருமபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 57-வது தேசிய நூலக வாரவிழா 17.11.2024 முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட மைய நூலகத்தில் தமித்தாய் வாழ்த்துடன் துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி திருமதி.அர.கோகிலவாணி மாவட்ட நூலக அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், போட்டித் தேர்வு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக முதல் நிலை நூலகர் திரு.இரா.மாதேஸ்வரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இவ்விழாவினை இரண்டாம் நிலை நூலகர் திரு.ந.ஆ.சுப்ரமணி அவர்கள் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் நூல் கண்காட்சியை திறந்து வைத்துத்தார்.  மேலும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டியில் பங்கேற்று  வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை  வழங்கி மாணவர்களுக்கு நூலகத்தின் அவசியத்தைப் பற்றியும் ஒரு நூலகம் திறப்பது என்பது  100 சிறைச்சாலைகளை மூடுவதற்குச் சமம் என்று நூலகத்தின் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். சிறப்புரையைத் தொடர்ந்து மாவட்ட நூலக அலுவலர் திருமதி.அர.கோகிலவாணி அவர்கள், நூலகத்திற்கு மாணவர்கள்  வருகை அதிகரிக்கவும், நூலகத்தில் பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தவும்,  நூலகத்தை எவ்வாறு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக  இதுபோன்று நூலக வரா விழாவினை நடத்தி அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக  கூறி தலைமையுரையாற்றினார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்(ப.நி), வாசகர் வட்ட துணைத்தலைவர் திரு.மு.பொன்முடி அவர்கள், திரு.மா.பழனி தலைமை ஆசிரியர் வாசகர் வட்டம் அவர்கள்,   திரு.க.சி.தமிழ்தாசன் தலைமை ஆசிரியர், கம்பன் கழகம், வாசகர் வட்ட உறுப்பினர்  அவர்கள், திரு.சி.இராஜேந்திரன் மாவட்ட நூலக அலுவலர்(ப.நி) அவர்கள் மாணவர்கள் கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற திருவள்ளுவரின் குறளுக்கேற்றவாறு கல்வியை எவ்வாறு கற்க வேண்டும் என்பதையும் நூல்களை மேலோட்டமாக கற்காமல் ஆழ்ந்து கற்று அறிய வேண்டும் என்று கல்வி கற்றலின் சிறப்பை எடுத்துரைத்து  வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவின் நிறைவாக  மூன்றாம் நிலை நூலகர் திருமதி.கி.அமுதா அவர்கள் நன்றியுரை வழங்கினார். மேலும் தேசிய கீதம் பாடப்பட்டு விழாவனது இனிதே நிறைவு பெற்றது.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க