tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

விக்கிரவாண்டி, ஜூலை 6–

 

 

விக்கிரவாண்டி தொகுதி, திருவாமாத்துாரில் பா.ம.க., வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பா.ஜ.தலைவர் அண்ணாமலை பேசியதாவது :

 

‘தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கெட்டு விட்டது என விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்’ என அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர். குறிப்பாக, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார். அப்படியென்றால், 2026 சட்டசபைத் தேர்தல் வரை இதே நிலை நீடித்தால், அதே காரணத்தைச் சொல்லி, 2026 சட்டசபைத் தேர்தலையும் அ.தி.மு.க., புறக்கணிக்கும் என பழனிசாமி அறிவிப்பாரா?

 

அதிகார வெறிக்காக, தன்னுடைய சுய லாபத்திற்காக பழனிசாமி அ.தி.மு.க.,வை அழித்து வருகிறார். அவருக்கு சில தலைவர்களும் துணை போகின்றனர். ஆனால், தொண்டர்கள் மாற்றுக் கட்சிக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, பா.ஜ.,வை நோக்கி பெருமளவில் வரத் துவங்கி விட்டனர். அதனுடைய தாக்கம் தொடருகிறது. கடந்தமக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. 

 

நம்பிக்கை துரோகி என்ற பெயர் ஒருவருக்கு பொருந்தும் என்றால் அது பழனிசாமிக்கு தான் பொருந்தும். டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட பழனிசாமியை, பிரதமர், தனக்கு அருகில் அமர வைத்து முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால், தன்னுடைய சுய லாபத்திற்காக பா.ஜ., வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டவர் பழனிசாமி. அதற்காக தான், மக்களவை தேர்தலில் மக்கள் அவருக்கு பாடம் புகட்டினர். பல இடங்களில் அ.தி.மு.க.,வை டெபாசிட் இழக்க வைத்தனர். 

அ.தி.மு.க., நன்றாக இருந்தாலும், தலைவர்கள் நன்றாக இல்லை. அதற்கான தண்டனையை மக்கள் அளித்துள்ளனர். 

 மக்களவை தேர்தலில் 134 வாக்குறுதிகளை பழனிசாமி அளித்துள்ளார். அதை அவர் எப்படிநிறைவேற்றப் போகிறார். 

 

பா.ஜ., கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு வாயிலாக கட்டாயம் நிறைவேற்றிக் கொடுப்போம். 

பழனிசாமி, எதையும் பேசுவதற்கு முன் சிந்தித்து பேச வேண்டும். எங்கள் கட்சிக்கு அவர் அறிவுரை கூற தேவையில்லை. அ.தி.மு.க., கட்சி கண் முன்னே கரையான் அரிப்பு போல கரைந்து வருகிறது. கண்ணாடி எடுத்து பழனிசாமி அவரது முகத்தை பார்த்தால், கண்ணாடி அவருக்கு அறிவுரை கூறும்.

 

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

 

***

ராசி பலன்

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து... மேலும் படிக்க

இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும்... மேலும் படிக்க

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும்.... மேலும் படிக்க

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால்... மேலும் படிக்க

குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அரசு காரியத்தில் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சமுகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் இலாபம் மேம்படும். வித்தியாசமான மின்னணு... மேலும் படிக்க

பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களைச் சீரமைப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில்... மேலும் படிக்க

திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில இடமாற்றம் நேரிடலாம். கணவன்,மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். உழைப்பிற்கு உண்டான... மேலும் படிக்க

நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடி ஏற்படும்.  வெளிப்படையான பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. பணியில் மறைமுகமான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆவணம்... மேலும் படிக்க

துணைவர் வழியில் மதிப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூகப்... மேலும் படிக்க