tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

பெங்­க­ளூ­ரு, ஏப். 23–

மத்திய பாஜ அரசுடன் திமுக இணக்கமாக உள்ளது. மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் பேச்சை மத்திய அரசு கேட்கிறது என்று கர்­நா­டக முதல்வர் சித்­த­ரா­மையா குற்றம் சாட்டி உள்­ளார்.

 

தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கு இடையே காவிரி நீர் பங்­கீடு தாவா காலம் கால­மாக இருந்து வரு­கி­றது. இந்­த­நி­லையில் ராமநகரா மாவட்டத்தில் அமைந்துள்ள மேகதாதுவில் 60 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் 9,000 கோடி ரூபாய் செலவில் புதிய அணையை கட்ட கர்­நா­டக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்­கான விரி­வான திட்ட அறிக்கையை மத்­திய அர­சுக்கு கர்­நா­டகம் அனுப்­பி­யது. ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் தரவில்லை. இதனால் தமிழ்நாட்டிற்கும் நன்மை கிடைக்கும் என்று கர்நாடகா கூறி வருகிறது. ஆனால் ஆரம்ப நிலையில் இருந்தே இந்த திட்­டத்­துக்கு தமிழ்­நாடு எதிர்ப்பு தெரி­வித்­து­வ­ரு­கி­றது. இதற்கு முன்பே முறையாக தண்ணீர் வராத போது, மேகதாது அணை கட்டினால் தண்ணீர் சுத்­த­மாக வராது என தமிழ்நாடு கூறி வரு­கி­றது. இந்­த­நி­லையில் தேர்தல் நேரம் என்பதால் மேகதாது விவகாரம் தற்போது பூதாகரமடைந்துள்ளது. இதனிடையே டெக் சிட்டியான பெங்களூருவை டேங்கர் சிட்டியாக காங்கிரஸ் மாற்றிவிட்டது என பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருடன் உரையாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், “மிஸ்டர் நரேந்திர மோடி, பெங்களூருவுக்கு அதிக குடிநீர் வழங்கக்கூடிய மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் கேட்டபோது ‘சொம்பு’ கொடுத்தது மத்திய பாஜ அரசுதான் என்பதை மறந்துவிடாதீர்கள். மேலும் இக்கட்டான சூழ்நிலையில் காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரையும் மறுத்தது. மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மோடிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, ஆனால், பெங்களூரு மக்கள் உங்களுக்கு வாய்ப்பு தரமாட்டார்கள்.எங்­க­ள­து குடிநீர் தேவைக்காக மேகதாதுவில் அணை கட்டுகிறோம். இதனால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் வராது. காவிரி தீர்ப்பாயம் கூறிய 177.25 டிஎம்சி தண்ணீரை நாம் தமிழ்நாட்டிற்கு முறையாக விடுவித்துவிடுகிறோம். குறிப்பிட்ட அளவு தண்ணீரை கோர மட்டுமே தமிழ்நாட்டிற்கு உரிமை உள்ளது. மத்திய பாஜ அரசுடன் திமுக இணக்கமாக உள்ளது. மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் பேச்சை மத்திய அரசு கேட்கிறது.

இவ்­வாறு சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க