tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, மே 20-

"கோடிக்கணக்கில் பணம் புரளும் இந்தத் தமிழ் சினிமாவில் நான் இருந்தாலும், நான் எழுதிய "புகார் பெட்டியின் மீது படுத்து உறங்கும் பூனை" என்னும் கவிதை நூலுக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. ரொக்கம் ரூபாய் 5000. இது மிகச் சிறிய தொகை தான் என்றாலும், இந்தப் பரிசு எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய கௌரவம்" என்று தேசிய விருது பெற்றிருக்கும் பிரபல டைரக்டர் சீனு ராமசாமி பெருமிதத்துடன் கூறினார்.

‘ஆரம்பத்தில் தான் வேலை பார்த்திருந்த ஸ்டேட் வங்கியின் மூலம் தமிழில் சிறந்த படைப்பாளிகளுக்கு விருது, ரொக்க பரிசு விழாவை நடத்தி வந்தார். இடையில் திடீரென்று வங்கி இத்திட்டத்தை தொடர முடியாமல் போன சூழ்நிலை உருவானது. இருந்தாலும் அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. அப்பொறுப்பை தானே ஏற்று, தன் நண்பர்கள் வட்டாரத்தின் ஒத்துழைப்போடு தொடர்ந்து 52 ஆண்டுகளாக படைப்பிலக்கிய கர்த்தாக்களை கௌரவித்து வரும் கவிஞர் -கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணனின் அளப்பரிய பணி பெருமைக்குரியது’ என்றும் சீனு ராமசாமி மனம் திறந்து பாராட்டினார்.

அது ஒரு பொன் மாலைப்பொழுது என்று தான் சொல்ல வேண்டும். தி நகர் வாணி மகால் ஓபுல் ரெட்டி ஹாலில் ‘கவிதை உறவு’ அமைப்பின் 52 ம் ஆண்டு விழாவை ஒட்டி ஐம்பெரும் விழாக்களை அதன் தலைவர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் (அன்று அவரின் 77வது பிறந்த நாள்) அழகுற நடத்தினார்.

30 எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மொத்தம் ரூபாய் ஒரு லட்சம் (முதல் பரிசு ரூபாய் 5000, இரண்டாம் பரிசு ரூபாய் 3000, மூன்றாம் பரிசு ரூபாய் 2000 என தேர்வான நூல்கள் 30) பரிசுத் தொகையை எஸ். ஜெகதீசன் வழங்கி வாழ்த்தினார். அதில் ஒரு நூல் டைரக்டர் சீனு ராமசாமி எழுதிய கவிதை நூல்" "புகார்ப் பெட்டியின் மீது படுத்து உறங்கும் பூனை".

* ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்பதைப் போல... ஏர்வாடி ராதாகிருஷ்ணன் ஒருவர் உருவாக்கி இருக்கும் அமைப்பின் மூலம் ஆண்டுக்கு ஆண்டு 30 நூல் ஆசிரியர்கள் பரிசு மழையில் நனைவது எழுத்தாளர்களுக்கு மகிழ்ச்சி என்று அவரோடு நிழலாகவே நடக்கும் கவிதை உறவின் தூண்களில் ஒருவரும், எழுத்தாளருமான தொலைபேசி மீரான் மகிழ்ச்சியோடு கூறினார்.

* ‘ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம், ஆனால் எழுத்தாளர்கள் கவிஞர்களுக்கு ‘கவிதை உறவின்’ விருது நாள் சுப தினம் என்று அனுபவம் பேசினார் கல்வியாளர்,- எழுத்தாளர்,- கட்டுரையாளர் என்று பன்முகம் காட்டும் அமுதா பாலகிருஷ்ணன்.

காவல்துறை அதிகாரி

சிவகுமாரின் " நீர்மகன்"

எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர்களாக முன்னாள் நீதிபதி எஸ். ஜெகதீசன், வி.ஜி.பி.உலகத் தமிழ் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் கலந்து கொண்டனர்.

எஸ்.ஜெகதீசன் பேசுகையில், கவிதை உறவில் விருது பெறுவோரும், சிறந்த நூல் பரிசு பெறும் நூலாசிரியர்களும் தமிழ்ப் பணியை தொடர வேண்டும் என்றார்.

கவிதை உறவு ஆண்டு விழா மலரும், கவிதை உறவு இதழ் ஆசிரியர் ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய ‘எங்கே வாழ்க்கை தொடங்கும்’ எனும் சிறுகதை தொகுப்பு மற்றும் ‘இன்று வரை என்றும்’ எனும் வாழ்வியல் கட்டுரையும், போலீஸ் சூப்பிரண்டு இரா.சிவகுமார் எழுதிய ‘நீர்மகன்’ எனும் நூலும் வெளியிடப்பட்டன.

நூல்களை கவிஞர் முத்துலிங்கம், ‘அமுதசுரபி’ திருப்பூர் கிருஷ்ணன், லேனா தமிழ்வாணன் ரவி தமிழ்வாணன் சகோதரர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

இவ்விழாவில் 87 வயதை கடந்திருக்கும் மூத்த பாடல் ஆசிரியர்- பிரபல கவிஞர் பூவை. செங்குட்டுவனுக்கு (4000க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 100 சினிமாப் பாடல்கள், 2 படத்துக்கு கதை, 3 படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியவர்) வாழ்நாள் சாதனையாளர் விருதை நீதிபதி எஸ் ஜெகதீசன் வழங்கினார்.

மேலும் மக்கள்குரல் வி.ராம்ஜீ (கலைமாமணி விக்கிரமன் விருது), ராஜா சுவாமிகள் (ஆன்மீகச் செல்வர்), முனைவர் ஆதிரா முல்லை( தமிழ் மாமணி), என் சி மோகன் தாஸ் (எழுத்துச் செல்வர்), கவிஞர் பாச்சலூர் மாணிக்கம் (கவிதைச்செல்வர்), டாக்டர் உமா பாரதி (கவிச்செல்வம்), நல்ல தம்பி (பதிப்புச் செல்வர்), நடுவூர் சிவா (இதழியல் செம்மல்), டாக்டர் கவிஞர் அண்ணா தாசன் (கவிதைச்செல்வர்) விருது பெற்றார்கள்.

டி. கே. எஸ். இளங்கோவன் (முன்னாள் எம்பி), தொழிலதிபர் வி ஜி சந்தோசம், சினிமா இயக்குனர் லிங்குசாமி, மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

வானதி பதிப்பகம், பேராசிரியர் தமிழ் இயலன், புலவர் மதியழகன், ஸ்ரீதேவி துரையரசு, பாளை மாணிக்கம், தொலைபேசி மீரான், புனித ஜோதி, ‘கூல் ஈவெண்ட்ஸ்’ குமார் (கேபிடல் கிச்சன் புகழ்) ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தார்கள்.

திரும்பிய பக்கம் எல்லாம் படைப்பாளிகளின் முகங்கள். அரங்கு நிரம்பி வழிந்தது. ஓபுல் ரெட்டி ஹால் அன்று ‘ஓ ஃபுல் (Full)’ ரெட்டி ஹாலானது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க