tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மே 23, 2024

சென்னை, மே 23- சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த நன்கொடை யாளரின் இரண்டு கைகளும் சுய தொழில் நடத்திவரும் கார்த்திக் என்பவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. 31 வயதாகும் கார்த்திக், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது இரு கைகளையும் இழந்தார், ஒரு இறுதிச் சடங்கில் கலந்துகொண்டபோது, பட்டாசு வெடித்து அவரது இரு கைகளும் பெரும் பாதிப்படைந்தது. இந்த நிலையில் அவர் உடனடியாக பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவரது இரு கைகளையும் எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைத்தனர். கைகளை இழந்த நிலையில் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக அவதிப்பட்டு வந்த கார்த்திக்கிற்கு விபத்தில் மூளைச் சாவு அடைந்த ஒருவரின் இரு கைகளும் பொருத்தப் பட்டுள்ளன. இதேபோல் ஆட்டோ ஓட்டுநர் மகன் 22 வயதான புவன் என்ற மற்றொரு நோயாளிக்கு மூளையில் ரத்தக்கசிவு காரணமாக மூளைச்சாவு அடைந்த பெண் நன்கொடையாளரின் கை பொருத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்த அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்ட இம்மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் செல்வ சீதா ராமன் கூறினார். இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளும் எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. கார்த்திக்கிற்கு 2 கைகளையும் பொருத்த சுமார் 20 மணி நேரத்திற்கு மேல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. விபத்தில் மூளைச் சாவு அடைந்த நன்கொடையாளரின் கைகள் திருச்சியில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, அறுவை சிகிச்சையை சரியான நேரத்தில் செய்து முடித்தோம் என்றார். இதேபோல் புவனைப் பொறுத்தவரை, அவருக்கு கிடைத்ததோ ஈரோட்டில் மூளைச்சாவு அடைந்த பெண் ஒருவரின் கையாகும். பெண் கையை ஆணுக்கு பொருத்துவது என்பது மிகுந்த சவாலான ஒன்றாகும். இதற்கும் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டபோதிலும் கார்த்திக் அறுவை சிகிச்சை உடன் ஒப்பிடும்போது இதற்கான நேரம் என்பது மிகக் குறைவுதான். இதில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், எலும்பியல் நிபுணர்கள், மயக்க வியல் நிபுணர்கள், சிறுநீரக மருத்துவர்கள் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் உட்பட 16 பேர் குழு இதை வெற்றி கரமாக செய்து முடித்தது என்று டாக்டர் செல்வ சீதாராமன் தெரிவித்தார்.

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க