tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஆக. 1–

டெல்லியில், காங்கிரஸ் பார்லிமென்ட் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவர் சோனியா பேசியதாவது: 

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இதில் ஏற்பட்ட பேரழிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது. அங்கு, நமது தொண்டர்கள், உதவுகின்றனர்.

 நாட்டின் பல பகுதிகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் எங்களது இரங்கலை தெரிவிக்கிறோம். இயற்கை பேரிடரை தவிர்த்து, தவறான நிர்வாகம் காரணமாக ஏற்படும் ரயில் விபத்துகளிலும் நமது மக்கள் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.

விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகள் முழுவதுமாக மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மத்திய பட்ஜெட்டைப் பற்றி சாதகமாக பேசினாலும், ஏமாற்றம் பரவலாக உள்ளது. 

நாட்டில் வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக கோடிக்கணக்கான குடும்பங்கள் அவதிப்படும் நிலையில், மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.

லோக்சபா தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, மோடி அரசு சரியான பாடம் கற்கும் என நினைதோம். ஆனால், மாறாக, சமூகங்களை பிரித்து அச்சம் மற்றும் விரோத போக்கு கொள்கையை தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.

கன்வார் யாத்திரை பாதையில் கடை வைத்திருப்பவர்கள் தங்கள் பெயர் அடங்கிய பலகையை பலரும் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும் என்ற உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் உத்தரவை சுப்ரீம் கோர்ட் சரியான நேரத்தில் தலையிட்டு தடுத்துவிட்டது.

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்கலாம் என விதிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளன.ஆர்எஸ்எஸ் தன்னை ஒரு கலாச்சார அமைப்பு என்று அழைத்துக் கொள்கிறது. ஆனால், அது பாஜவின் அரசியல் மற்றும் சித்தாந்தத்துக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய அமைப்பு என்பது. உலகுக்கே தெரியும்.

கடந்த ஆண்டுகளில் கல்வி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. தேசத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பதிலாக, ஒட்டு மொத்த கல்விமுறையும், குறைபாடுள்ளதாக கையாளப்பட்டுள்ளது.

 போட்டித் தேர்வுகளில் நடந்த மோசடிகள் அம்பலமாகி, இளைஞர்களின் நம்பிக்கையை அழித்து, அவர்களின் எதிர்காலத்தை பாதித்துள்ளது. தன்னாட்சி பெற்ற அமைப்பான என்சிஇஆர்டி, யுஜிசி மற்றும் அரசியல்சாசன அமைப்பான யுபிஎஸ்சி போன்றவை அழிக்கப்பட்டு விட்டது.

ஜம்முவில் மட்டும் கடந்த சில வாரங்களில் 11 தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. பாதுகாப்பு படை வீரர்கள், அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இது, காஷ்மீர் குறித்து மோடி அரசு சொல்லும் தகவல்களை கேலிக்கூத்தாக்கி உள்ளது. 

மணிப்பூர் மாநிலத்திலும் சூழ்நிலை மேம்படவில்லை. உலகின் பல நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, மணிப்பூர் சென்று, இயல்பு நிலையை கொண்டு வருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த மறுக்கிறார்.

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் எண்ணம், அரசுக்கு இல்லை. ஜாதிவாரியாக மக்கள்தொகை விகிதம் எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதை, அரசு தடுக்கிறது. 

பொதுமக்களின் மனநிலை, காங்கிரசுக்கு சாதகமாக உள்ளது. லோக்சபா தேர்தலில் நாம் மேற்கொண்ட பிரச்சாரம் காரணமாக, கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கையும், நல்லெண்ணமும் உருவாகி இருக்கிறது. இதனை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

நாம் மனநிறைவு மனநிலைக்கோ, அதிகப்படியான தன்னம்பிக்கைக்கோ சென்றுவிடக்கூடாது. லோக்சபா தேர்தலில் வெளிப்பட்ட சாதகமான சூழலை கருத்தில் கொண்டு நாம் சிறப்பாக செயல்பட்டால், தேசிய அரசியலில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

இவ்வாறு சோனியா பேசினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க