tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, நவ. 9–
‘மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை செய்யாமல், கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை:
ஜெயலலிதா ஆட்சியில், மக்கள் நலனுக்காக துவக்கப்பட்ட திட்டங்களுக்கு, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற, 42 மாதங்களில், போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அவை முழுமையாக முடிக்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் இருந்து, தினமும் 60 எம்.எல்.டி., கடல் நீரை குடிநீராக்கும், 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் கைவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், அழகன்குப்பம் பக்கிங்ஹாம் கால்வாயிலும், ஆலம்பராகோட்டை அருகிலும், 235 கோடி ரூபாயில், மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலை ரத்து செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே, ஆதனுார் – குமாரமங்கலம் தடுப்பணை பணி காலதாமதமாக நடக்கிறது. அத்திக்கடவு – அவினாசி திட்டம், காவிரி உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

சேலம், தலைவாசல் கால்நடைப் பூங்கா திறக்கப்படவில்லை. தென்காசி – ஜம்பு நதி மேல்மட்டக் கால்வாய் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி இரட்டை குளம் முதல் ஊத்துமலை வரை, கால்வாய் பணிக்கு நிதி ஒதுக்கவில்லை. மதுராந்தகம் ஏரியை துார் வாரும் பணி, மூன்று ஆண்டுகளாக தொய்வில் உள்ளது.

இப்படி விவசாயிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் பயன்படும் திட்டங்களை, தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுள்ளது. மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதன செலவுகளை செய்யாமல், அத்தியாவசியமற்ற செலவுகளை, ஸ்டாலின் அரசு செய்கிறது. தமிழக மக்களுக்கு சிறிதும் பயன் அளிக்காத, ‘கார் ரேஸ்’ நடத்தப்படுகிறது. கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள், மாநிலம் முழுதும் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னை முட்டுக்காட்டில், 5 லட்சம் சதுர அடியில், 487 கோடி ரூபாயில், கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க, அரசு ‘டெண்டர்’ கோரியுள்ளது. பல ஆண்டுகளாக விவசாயிகள், நதி நீர் இணைப்புக்காக போராட்டம் நடத்தி வரும் நிலையில், தி.மு.க., அரசு அதில் கவனம் செலுத்தாமல், பன்னாட்டு அரங்கம் கட்ட முனைப்பு காட்டுவது ஏன்?

உள்நாட்டு நதி நீர் இணைப்பு திட்டங்களை, 10 ஆண்டுகளில் செயல்படுத்தாவிட்டால், பல மாவட்டங்கள், வறட்சியால் பாதிக்கப்படும் என, ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின், அவரது தந்தை பெயரை, அரசு கட்டடங்களுக்கு வைக்க வேண்டும் என்றால், அவரது அறக்கட்டளை சார்பில், அப்பணிகளை செய்யலாம். போதிய நிதி இல்லாமல், மக்கள் நலத் திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தேவையான நிதியை, அரசு முழுமையாக ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க