tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை, மே 6

ஜிஎஸ்டி முரண்பாடுகளை நீக்க வேண்டும், சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மதுரையில் நேற்று நடந்த வணிகர் விடுதலை முழக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரை வலையங்குளத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். நேற்று காலை தொடங்கி மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் நடந்த மாநாட்டு நிகழ்ச்சி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடந்தது. அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார் மற்றும் மண்டலத்தலைவர்கள் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்றார். பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா தீர்மானங்களை வாசித்தார்.

அதன்படி மாநாட்டில், ‘‘இரட்டை விலை கொள்கை ஆன்லைன் வர்த்தகத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை அகற்றிட வேண்டும். ஒரே நாடு ஒரே வரி முழக்கம் தணிக்கை செய்யப்பட்ட வரி விதிப்புக்கு அபராதம் தவிர்த்திட வேண்டும். இயற்கை பேரிடர் வணிக பாதிப்புக்கு அரசு காப்பீடு திட்டம் வழங்கிட வேண்டும். ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டங்களில் உள்ள முரண்பாடுகள் முழுமையாக நீக்கப்பட வேண்டும். சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும். டெல்டா மாவட்டங்களோடு தென் மாவட்டங்களை இணைத்து பயணிகள் ரயில் போக்குவரத்து இயக்கிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையாக பலன்கள் வணிகர்களுக்கு அளித்திட வேண்டும். ஒற்றைச்சாளர உரிமம் மற்றும் உரிமம் புதுப்பித்துடும் காலஅளவை 5 ஆண்டுகளாக நீட்டித்திட வேண்டும். நகை அடகு பிடிக்கும் வணிகம் செய்பவர் மீது காவல்துறை அத்துமீறலை விலக்கிட வேண்டும். மாதாந்திர மின் கட்டண கணக்கீட்டு முறை மற்றும் நகர்புற வளர்ச்சிசட்டங்கள் அமலாக்கம் செய்து கட்டிடங்கள் வரைமுறைப்படுத்தப்பட வேண்டும். 1000 ரூபாய்க்கு குறைவான தங்கும் விடுதி கட்டணங்களில் ஜி.எஸ்.டி வரிவிலக்கு வேண்டும். டெல்டா மாவட்டங்களோடு தென்மாவட்டங்களை இணைத்து பயணிகள் ரயில் போக்குவரத்து சேவையை துவக்க வேண்டும்’’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அமைச்சர் மூர்த்தி

மாநாட்டில் அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில் ‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வணிகர்களுக்கு எப்போதும் துணையாக, வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். வணிகர்கள் மீதும் சிறு வியாபாரிகள் மீதும் தவறான நடவடிக்கைகள் தொடர்ந்தால் அதிகாரிகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த 3 ஆண்டுகாலத்தில் வணிகர்களிடத்தில் நான் ஒரு டீ கூட இலவசமாக குடித்தது கிடையாது. அதிகாரிகள் கையூட்டு ஒன்றிரண்டு இடத்தில் பெற்றாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். வணிகர்களின் பாதுகாவலனாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பார்’’ என்றார்.

அனிதா ராதாகிருஷ்ணன்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், வணிகர்கள் எந்தவித கோரிக்கைகள் வைத்தாலும் அதை நிறைவேற்றும் அரசாக இது இருக்கும். இம்மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும், அது நமது மாநாடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்’’ என்றார்.

விக்கிரமராஜா

மாநாட்டில் தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது:

வணிகர்களின் வாழ்வாதாரத்தை காவு கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் கார்பரேட் நிறுவனங்கள், மறுபுறம் ஆன்லைன் வர்த்தகம் ஆகியவை நசுக்கிக் கொண்டிருக்கின்றன. ஜி.எஸ்.டி. வரி நான்காக பிரிக்கப்பட்டதால் வணிகர்களை பாதித்து வருகிறது. வாங்கிய பொருளுக்கு வரி கட்டவில்லை என்றால், அதற்கும் வணிகர்கள் தான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அதுமட்டுமின்றி அரசு துறை அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. வணிகவரித்துறையில் உள்ள அதிகாரிகள் எழுத்துப் பிழைக்காக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கிறார்கள். விளக்கம் கேட்டால் எங்களுக்கு அரசு டார்கெட் வைத்துள்ளது என்கிறார்கள். வணிகவரித்துறை அமைச்சர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வருவதாக கூறி, வாடகை விகிதத்தை உயர்த்தியுள்ளனர். இந்தியாவில் சுங்ககட்டண வரி இருக்காது என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் சுங்க கட்டண வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி.யும் வசூலிக்கப்படுவதால் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ள சட்டங்களை மாற்றி சாதாரண வணிகர்களும் பயன்பெறும் வகையில் தனி சட்டங்களை அமைத்து தர வேண்டும். இல்லை என்றால் டெல்லிக்கு சென்று பேரணி, தர்ணா போராட்டம், ஆர்ப்பாடத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து, மூத்த வணிகர்களுக்கு வ.உ.சி. விருது வழங்கப்பட்டது. இதுபோல், வணிகர்களுக்கு உதவி தொகையும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மாநாட்டில் பேரமைப்பின் மதுரை மாவட்ட துணைத்தலைவர் எம்.வெங்கடேசன், வக்கீல் எம்.ஆர்.கிருஷ்ணகுமார், என்.பாண்டி, ஜி.எஸ்.டி. ஆடிட்டர் கிருஷ்ணசாமி மற்றும் ராஜாராம்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க