tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூலை 25–

மத்திய பட்ஜெட் குறித்து தமிழக தலைவர்கள் கருத்து வருமாறு:

பா.ம.க., தலைவர் ராமதாஸ்: பழைய வருமான வரி முறையில் மாற்றம் செய்யப்படாதது, தமிழகத்தின் வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விசாகப்பட்டினம் -– சென்னை தொழில் வழிச்சாலை திட்டத்தால், தமிழகத்திற்கும் பலன் கிடைக்கும். ஆனால், தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு, பாசன திட்டங்களை பட்ஜெட்டை நிறைவேற்றும் போது சேர்க்க வேண்டும்.

ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ: ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவோம் என, பா.ஜ., கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறந்தன. தற்போது, 2 லட்சம் கோடி ரூபாய் செலவில், 4.1 கோடி இளைஞர்களுக்கு ஐந்தாண்டுகளில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும்; ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, படித்த இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது. அசாம், உத்தரகண்ட், சிக்கிம், ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களின் வெள்ள பாதிப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கிய மத்திய அரசு, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் வஞ்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: பீகாருக்கு, 26,000 கோடி ரூபாயும், ஆந்திர மாநிலத்துக்கு, 15,000 கோடி ரூபாயும் சிறப்பு நிதியாக, நிர்மலா சீதாராமன் வாரி வழங்கியிருக்கிறார். தமிழக முதல்வர் விடுத்த கோரிக்கையின்படி, வெள்ள நிவாரண நிதியோ, மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியோ, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடோ இல்லை. வழக்கமாக வாசிக்கப்படும் தமிழ்நாடு என்ற வார்த்தையும் இல்லை; பாரதியார் கவிதைகளோ, திருக்குறளோ இல்லை.

இந்திய கம்யூ.செயலாளர் முத்தரசன்: நாட்டில், 50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அதீத வறுமையில் உள்ளனர். இதை ஓரளவுக்கு மாற்றுவதற்கு கூட நிதிநிலை அறிக்கையில் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. விரைவில், சட்டசபை தேர்தல்கள் வர இருக்கும் மாநிலங்களில், பா.ஜ., பக்கம் ஓட்டுகளை ஈர்க்க, கார்ப்பரேட்டுகள், பெருவணிக குழுக்களுக்கு நிதிநிலை அறிக்கை உதவி செய்கிறது. சாதாரண மக்களை வஞ்சிக்கும் பட்ஜெட்டாக உள்ளது.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன்: தமிழகத்திற்கு சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: மத்திய அரசு அறிவித்திருக்கும் பட்ஜெட் தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் .

இவ்வாறு அவர்கள் கூறிஉள்ளனர்.

++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க