tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, மே 9

மரபணு அடிப்படையில் உண்டாகும் பரம்பரை ரத்தக் கோளாறான தலசீமியாவைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே உருவாக்கும் வகையில் தலசீமியா நலச் சங்கம் சார்பில் தலசீமியா தினம் கொண்டாடப்பட்டது.

நடிகை சுஹாசினி மணிரத்னம் கலந்து கொண்டு, தலசீமியா தடுப்பு யுக்திகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தலசீமியா என்பது ஒரு மரபணு சார்ந்த பரம்பரை ரத்தக் கோளாறு ஆகும். மேலும் இது ரத்த சிவப்பணுக்களை தேவையான அளவு உருவாக்கும் நம் உடலின் திறனை வெகுவாக தடுக்கிறது. இதன் விளைவாக தலசீமியாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுகிறது.

தலசீமியாவினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இதன் பாதிப்பு அறிகுறியற்றதாக இருந்தாலும், கணவன் - மனைவி என இருவரும் தலசீமியாவினால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களது குழந்தைகளுக்கும் இந்த பரம்பரை மரபணு ரத்தக் கோளாறினால் பாதிக்கப்பட 25% வாய்ப்புகள் இருக்கின்றன. இது பின்னாளில் அவர்களும் தலசீமியாவினால் கடுமையாக பாதிக்கப்பட வழிவகுக்கும். கடுமையான தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உயிருடன் இருக்க ரத்தம் செலுத்த வேண்டும்.

இந்தியாவில், தலசீமியாவின் பாதிப்பு 3.9% ஆக உள்ளது. அதாவது தலசீமியாவின் பாதிப்புள்ள, தங்களது குழந்தைகளுக்கும் கடத்த வாய்ப்புகள் உள்ளவர்கள் சுமார் 40 மில்லியன். தலசீமியா குறித்த விழிப்புணர்வு மற்றும் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் மேற்கொள்ள கூடிய எளிமையான ரத்த பரிசோதனை மூலம் நம் நாட்டில் தலசீமியாவில் பாதிப்புடன் குழந்தைகள் பிறப்பதை தவிர்க்க முடியும்.

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் புற்றுநோய் மருத்துவமனை குழந்தைகள் டாக்டர் ரேவதி ராஜ் கூறுகையில், “தலசீமியா இந்தியாவில் ஒரு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய மருத்துவ சவாலாக இருப்பதை உணர்த்துகிறது.

இது ஒரு மருத்துவ நிலை மட்டுமல்ல; இது கருணை, விழிப்புணர்வு மற்றும் ஒன்றிணைந்து செயல்படுத்தும் நடவடிக்கைக்கான ஒரு முக்கிய அழைப்பாக உருபெற்று இருக்கிறது. நம் எல்லோருடைய கூட்டு முயற்சிகளின் மூலம், இது குறித்த விழிப்புணர்வின் மூலம் சமூகங்களை மேம்படுத்தலாம், அத்தியாவசிய மருத்துவ பராமரிப்பை வழங்கலாம் மேலும் தலசீமியாவின் பாதிப்பில்லாத குழந்தைகளுடன் கூடிய எதிர்காலத்தை முன்னெடுக்கலாம்’’ என்றார்.

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க