tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஆக. 7– 

பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம் ஏன் என்பதற்குஅமைச்சர் விளக்கம் அளித்தார்.

  சென்னை சூளைமேட்டில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு மற்றும் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்றார். முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. 

பாதுகாப்பது கடமை

இதில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியது:

 தன்னைவிட தன் பிள்ளை அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று தாய் தந்தை நினைக்கிறார்கள். வளர்ந்த பிறகு பெற்றோர்களை காப்பாற்ற வேண்டிய கடமை ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் உள்ளது. வயதானவர்கள் சாப்பிட்டியா தூங்கிட்டியா என்று கேட்க ஒரு ஆள் வேண்டும் என்று நினைக்கிறார்கள். எந்த முதியோராக இருந்தாலும் அவர்களை பாதுகாப்பது நமது கடமை. முதியோர் பராமரிப்பு மையங்கள் அதிகரிக்க கூடாது என்பதுதான் முதலமைச்சரின் எண்ணம், பராமரிப்பு இல்லத்தை நாம் குறைத்திட வேண்டும். இன்று எடுத்த உறுதிமொழியை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு காலத்தில் பெண்களைப் படிக்கவே விடமாட்டார்கள், வகுப்பறையில் 50 பேர் இருந்தால் அதில் இரண்டு பேர் தான் பெண்கள் இருப்பார்கள். பெண்கள் படிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் பெரியார் அதற்க்கு பிறகு அண்ணா, கலைஞர், அதன் பிறகுதான் மகளிர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது. தற்போது முதலமைச்சர் பெண்களுக்கு பல திட்டங்களை வடிவமைத்து வருகிறார். தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தாமதம் ஏன்?

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், "பள்ளிச் சீருடைகள் தாமதமாக வழங்கப்படுகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரியாமல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். சில பள்ளிகளில் அளவு சரியாக இல்லாமல் இருந்ததாக புகார்கள் வந்தன. தையல் சொசைட்டியில் உள்ள பெண்கள் நேரடியாக பள்ளிகளுக்குச் சென்று அளவெடுத்து சீருடைகள் தைப்பதால் சிறிது காலதாமதம் ஏற்பட்டது. 

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தரமாகவும், பிரத்யேகமாகவும் அளவெடுத்து தைப்பதால் 15 முதல் 20 நாட்கள் காலதாமதம் ஆகிவிட்டது. இந்த மாதத்திற்குள் நான்கு செட் பள்ளிச் சிறுவடை வழங்கி விடுவோம் என்றார்.’ 

 குழந்தை திருமணம் தொடர்பாக தற்போது புகார் வருகிறது. அதற்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும்அமைச்சர்கூறினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க