tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கரூர், ஜூன் 7

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூன்றாம் கட்டமாக விரிவாக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 6.5.2022 அன்று சட்ட மன்றத்தில் 110 விதியின் கீழ் ஆரோக்கியமான வருங்கால சந்ததியினரை உருவாக்குவதற்காக அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வேலைநாட்களிலும் இலவச காலை உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 15 அன்று முதற்கட்டமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 16.9.2022 அன்று கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 77 தொடக்க பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு பயிலும் 3469 பள்ளி மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தில் பயன் பெறுகிறார்கள்.

அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 25.8.2023 கூடுதலாக கரூர் மாவட்ட முழுவதும் மேலும் 628 மையங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 25,980 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 705 மையங்களில் 29449 தொடக்க பள்ளி மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தில் பயன் பெற்று வருகிறார்கள்.

என்னென்ன உணவுகள்

இத்திட்டத்தில் திங்கட்கிழமை அரிசி உப்புமா- காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை சேமியா காய்கறி கிச்சடி காய்கறி சாம்பார், புதன்கிழமை வெண் பொங்கல் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை ரவா உப்புமா காய்கறி சாம்பார் மற்றும் வெள்ளிக்கிழமை கோதுமை ரவா காய்கறி கிச்சடி காய்கறி சாம்பார் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் தற்பொழுது மூன்றாம் கட்டமாக 24 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1,693 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை விரிவாக்கம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கென அனைத்து தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் விவரம், சமையலறைக் கூடங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், புதிய சமையலறை கூடங்கள் கட்டுதல், சுய உதவிக்குழுவில் பணியாற்றும் அனுபவமிக்க சமையல் பணியாளர்கள் தேர்வு போன்றவை இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், காலை உணவு தயாரித்தலுக்குரிய காய்கறிகள், எண்ணெய் மற்றும் சமையல் பொருட்களின் தரம் மற்றும் தயார் செய்யப்பட்ட உணவினை மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் முன் பள்ளி மேலாண்மைக்குழு ஒவ்வொருநாளும் தரத்தினை உறுதி செய்திடும் பொருட்டு, உணவினை ருசி பார்த்து பின்னர் வழங்க வேண்டுமெனவும், உணவுபாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உணவின்தரத்தை உறுதி செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மகளிர்திட்ட இயக்குநர் சீனிவாசன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கெண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க