tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

நாகர்கோவில், ஜூலை 22–

கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று நாகர்கோவில் வந்தார். பின்னர் வடசேரியில் ரப்பர் கழக அலுவலகத்தில் அமைச்சர்கள் மதிவேந்தன், மனோதங்கராஜ் மற்றும் அதிகாரிகள், பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ரப்பர் கழக தொழிலாளர்களின் குறைந்தபட்சம் ஊதியம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்பின் அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:–

குமரி மாவட்ட ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பாக நானும், பால்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சேர்ந்து பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ரப்பர் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தொகையை ரூ.௪௫ அதிகப்படுத்தி ரூ.௬௩௦ என முடிவு செய்துள்ளோம். 

இது மட்டுமல்ல, அரசு ரப்பர் கழகத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேறு என்னென்ன உதவி செய்யலாம் என்பதை எம்.டி.யுடன் ஆலோசித்து கிலோவுக்கு ரூ.௭.௫௦ என இருந்ததை ரூ.௮ என உயர்த்தி உள்ளோம். வீட்டு வாடகை படியை ரூ.௨௨௫ ஆக உயர்த்தி உள்ளோம். பண்டிகை கால முன்பணம் ரூ.௧௫ ஆயிரமாகவும், இறுதி சடங்குநிதியை ரூ.௧௫ ஆயிரமாகவும் உயர்த்தி உள்ளோம். மேலும் தொழில் கருவிகளை கூர்மையாக்குவதற்கான தொகையை ரூ.௧௦௦ மற்றும் ரூ.௧௨௦ என அதிகரித்துள்ளோம். இவ்வாறு அரசு ரப்பர் கழக தொழிலார்களின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதை தொழிற்சங்கத்தினரும் ஒப்பு கொண்டு உள்ளார்கள். இதன்மூலம் இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக மகிழ்ச்சியாக முடிந்துள்ளது.

லாபம் ஈட்ட நடவடிக்கை

இது தவிர மேலும் பல கோரிக்கைகளை சங்கத்தினர் வைத்துள்ளனர். சி.எல்.ஆர்., இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி என பல கோரிக்கைகள் விடுத்தனர். இது எல்லாவற்றையும் பரிசீலித்து ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். அரசு ரப்பர் கழகத்தை வருவாய் ஈட்டும் துறையாக மாற்ற அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தி.மு.க. ஆட்சி வந்தது முதல் அரசு ரப்பர் கழகத்தை லாபகரமாக செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டான்டி தொழிற்சாலைக்கு ரூ.௭௦ கோடி நிதியை முதல்வர் ஒதுக்கினார். அதுபோல் மற்ற நிறுவனங்களுக்கும் படிப்படியாக நிதி வழங்கி வருகிறார். 

எச்டிஎப்சி வங்கியுடன் இணைந்து ரூ.௬௬ லட்சத்துக்கான இன்சூரன்ஸ் வழங்கியுள்ளோம். மேலும் எங்கெங்கு இழப்பு ஏற்படுகிறது என்பதையும், எங்கு லாபம் ஈட்ட முடியும் என்பதையும் கண்டறிந்து அதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

மக்களை காக்க வேலி

காட்டு விலங்குகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பென்சிங் அமைத்துள்ளோம். மேலும் வேறு என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து வருகிறோம். வன பாதுகாப்பு காவலர்களுக்கு துறை ரீதியாக என்ன செய்ய முடியுமா அதை சீனியாரிட்டி அடிப்படையில் செய்ய ஆலோசனை நடத்தி வருகிறோம். இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு குடிசைமாற்று வாரியம் மூலம் வீடு வழங்க மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து அவர்களுக்கு வீடு வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறுமதிவேந்தன் கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர் மனோதங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க