tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

விரார், நவ. 21

மகாராஷ்டிராவில் நேற்று தேர்தல் நடந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்த பா.ஜ. எம்.எல்.ஏ. சிக்கி உள்ளார். 

 அங்குள்ள பல்ஹார் மாவட்டம் விரார் என்ற இடத்தில் ஒரு சொகுசு ஓட்டலில் பா.ஜ., முன்னாள் அமைச்சரும் தேசிய பொதுச் செயலாளருமான வினோத் தவாடே, மற்றும் பா.ஜ, எம்.எல்.ஏ., ராஜன் நாயக் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் கட்டுக்கட்டாக பணத்துடன் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பகுஜன் விகாஸ் அகாடி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., தன் ஆதரவாளர்களுடன் சொகுசு ஓட்டலுக்குள் அதிரடியாக புகுந்தார். அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். 

பணத்துடன் கையும் களவுமாக சிக்கியதால், அவர்களிடம் வினோத் தவாடே வாக்குவாதம் செய்து சமாளித்தார். தகவலறிந்த போலீசார் பகுஜன் விகாஸ் அகாடி கட்சி தொண்டர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அதை அப்படியே வீடியோ எடுத்து செய்தியாளர்களிடம் காண்பித்தனர். இதன் வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் காங். பதிவேற்றியது. வினோத் தவாடேயிடமிருந்து மொத்தம் ரூ. 5 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஆனால் வினோத் தாவடே தங்கியிருந்த அறையில் ரூ. 9.93 லட்சம் தான் பறிமுதல் செய்யப்பட்டது. இது தேர்தல் விதியை மீறிய செயல் என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறினர். ஆனால் எதிர்க்கட்சிகளின் சதி வலை இது. அதில் வினோத் தவாடே சிக்கிக் கொண்டார் என்றும் பா.ஜ. குற்றம் சாட்டி உள்ளது.

++

ராசி பலன்

வியாபாரம் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் சில மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். சவாலான செயல்களையும்... மேலும் படிக்க

இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் பணி வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். சமூகப் பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். எதிர்ப்பாராத சில இடமாற்றம்... மேலும் படிக்க

மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சி இன்மை ஏற்படும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து... மேலும் படிக்க

ஆன்மிகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபார முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு... மேலும் படிக்க

பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். பங்குதாரர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். முன் கோபத்தால் சில விரயங்கள் நேரிடும். மற்றவர்கள் கூறும்... மேலும் படிக்க

பொழுதுபோக்கு செயல்பாடுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் எண்ணங்களை... மேலும் படிக்க

குடும்ப பெரியோர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வாகனம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு கட்டுவது சார்ந்த... மேலும் படிக்க

எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் தைரியம் உண்டாகும். காலி மனை மூலம் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தபால் துறைகளில்... மேலும் படிக்க

செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில்... மேலும் படிக்க

இனம்புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம்... மேலும் படிக்க

அவசரம் இன்றி எதிலும் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடல்... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உருவாகும். வியாபார பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.... மேலும் படிக்க