tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, டிச. 13–
நடிகர் வடிவேலு பற்றி இனி அவதூறு பேச மாட்டேன் என்று கோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாத மனு தாக்கல் செய்தார்.
சினிமாவில் நடிகர் வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சிகளுக்கு வசனம் எழுதிக் கொடுத்து, அவருடன் நடித்து வந்தவர் சிங்கமுத்து. கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.இதற்கிடையில், வடிவேலு குறித்து அவதூறாக யூடியூப் சேனல்களுக்கு சிங்கமுத்து பேட்டி அளித்ததாகக் கூறப்படுகிது. இதனால், மான நஷ்டஈடாக ரூ. 5 கோடி வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிடக் கோரி, ஐகோர்ட்டில் வடிவேலு மனுத் தாக்கல் செய்தார். மேலும்,  தன்னைப் பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வடிவேலு கோரினார்.
ஐகோர்ட்டில் மனு டிசம்பர் 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 'இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னரும், சிங்கமுத்து தொடர்ந்து  அவதூறு பேட்டி அளித்து வருகிறார்' என  வடிவேலு தரப்பில்  குற்றம் சாட்டப்பட்டது.
உத்தரவாத மனு
இதையடுத்து, 'வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். இனி அவருக்கு அவதுாறு ஏற்படுத்தும் விதத்தில் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன்' என்று உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யுமாறு, சிங்கமுத்துக்கு நீதிபதி உத்தரவிட்டு, விசாரணைய தள்ளி வைத்தார்.
இந்நிலையில், ஐகோர்ட்டில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில், வடிவேலு மனு  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில்,  'நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதுாறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ, எழுத்துபூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ வெளியிடப் போவதில்லை; என சிங்கமுத்து தெரிவித்திருந்தார். இதை நீதிபதி பதிவு செய்து, விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ராசி பலன்

கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீண்ட நாள் உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.... மேலும் படிக்க

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். செயல்பாடுகளின் தன்மைகளை அறிந்து முடிவு செய்யவும். வியாபார ரீதியான பயணங்களில் சாதகமான சூழல்கள் அமையும். துரித வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.... மேலும் படிக்க

சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செய்யும் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சகோதரர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். தொழிலில் புதுவிதமான அனுபவம்... மேலும் படிக்க


மருமகன் வழியில் இருந்துவந்த வேறுபாடுகள் விலகும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். சுபகாரியங்களில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு, புகழ்... மேலும் படிக்க

உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் காணப்படும். காப்பீடு தொடர்பான புரிதல்கள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. திடீர் தன வரவுகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள்... மேலும் படிக்க

ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மாணவர்களுக்கு... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். காப்பீடு சார்ந்த துறைகளில்... மேலும் படிக்க

திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசுப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள்... மேலும் படிக்க

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமித்தமான சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வது மனதிற்கு நல்லது. உத்தியோகப் பணிகளில் அமைதியான சூழ்நிலை ஏற்படும். சுபகாரியப் பேச்சு வார்த்தைகள் கைகூடும்.... மேலும் படிக்க

பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் லாபம் மேம்படும். வியாபார பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். மனதில் கற்பனை சார்ந்த புது... மேலும் படிக்க

உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். துறை... மேலும் படிக்க

உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். உங்கள் மீதான சில விமர்சனங்கள் மறையும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள்... மேலும் படிக்க