tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

பெங்களூரு, ஏப்.29-

போதிய அளவு வறட்சி நிவாரண நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் கர்நாடகா அமைச்சர்கள் 'சொம்பு' போராட்டத்தை நடத்தினர்.

போதிய அளவு வறட்சி நிவாரண நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அமைச்சர்கள் காலி செம்புகளுடன் பெங்களூரு விதான சவுதாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.18 ஆயிரத்து 171 கோடி வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்தது. அங்கு நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது. இந்த நிலையில் கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரத்து 454 கோடி ஒதுக்கியது. இந்த நிதி போதாது என்று முதலமைச்சர் சித்தராமையா கூறினார்.

இந்த நிலையில் வறட்சி நிவாரண நிதி வழங்கியதில் அநீதி ஏற்பட்டுள்ளதாக கூறி மத்திய அரசை கண்டித்து முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்பட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்கள் தங்களின் கைகளில் காலி சொம்புகள் வைத்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த சித்தராமையா, "வறட்சி நிவாரண நிதியாக ரூ.18 ஆயிரத்து 171 கோடி வழங்குமாறு கேட்டோம். ஆனால் 7 மாதங்கள் தாமதத்திற்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்த பிறகு, இப்போது ரூ.3 ஆயிரத்து 454 கோடி நிதி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இது போதாது. நாங்கள் கேட்ட நிதியில் 20 சதவீதம் தான் வழங்கியுள்ளனர். மத்திய அரசு கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கிறது. கர்நாடகத்திற்கு உரிய வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும். நாங்கள் கர்நாடக அரசின் உத்தரவாத திட்டங்களுக்காக இந்த நிதியை மத்திய அரசிடம் கேட்பதாக பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டுகிறார்கள். எங்களின் உத்தரவாத திட்டங்களுக்கு நிதியை கேட்கவில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க தான் நிவாரண நிதியை கேட்கிறோம்" என்றார்.

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க