tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஆக. 30– 

தேர்தலில்பா.ஜ.மூத்த தலைவர் வாஜ்பாயே தோற்றிருக்கிறார். எனவே எனது தோல்வி பெரிதல்ல. மோடி ஒருவர் தான் தோல்வியே காணாத தலைவர் என்று மாஜி மந்திரி இரானி கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. பாஜ மூத்த தலைவரான இவர், 2019 மக்களவைத் தேர்தலில், உபி மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுலை தோற்கடித்தார். சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் இரானி தோல்வி அடைந்தார். இதன் மூலம் ஸ்மிருதி மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு பறிபோனது.

இந்நிலையில் ஆங்கில செய்தி சேனலுக்கு இரானி அளித்த பேட்டி: 

 அமேதி தொகுதியில் தோற்றது பற்றி நான் கவலைப்படவில்லை. பா.ஜ. மூத்த தலைவர் வாஜ்பாயே தேர்தலில் தோற்றவர் தான். மோடி ஒருவர் தான் இது வரை தோற்காதவர். 2004 தேர்தலில் கூட டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் நான் தோற்றிருக்கிறேன். தேர்தல்கள் வரும்.. போகும். எனது உண்மையான வெற்றி எது தெரியுமா.... ஒரு லட்சம் குடும்பத்தினர் தற்போது சொந்த வீடுகளில் வசிக்கின்றனர். 80 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் கிடைத்துள்ளது. முதன்முறையாக இரண்டு லட்சம் குடும்பத்தினர் காஸ் சிலிண்டர்கள் பெற்றுள்ளனர். இது தான் எனக்கு கிடைத்த வெற்றி.

தேர்தல் நேரத்தில் மக்கள் மனதில் இடம் பிடிக்க , கோயில்களுக்கு ராகுல் அடிக்கடி சென்றார். இது கேலிக்கூத்தாக மாறியது. 

அந்த உத்தி பலனளிக்காததால், தற்போது ஜாதி பிரச்னை குறித்து பேச ஆரம்பித்துவிட்டார். மக்களவை தேர்தலில் வெற்றியை ருசித்து விட்டதாக கற்பனையில் வாழும் ராகுல், இப்போது வித்தியாசமான அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி இப்போது பேசுகிறார். 2004 – 14ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடந்த போதும் ராகுல் எம்பியாகத்தான் இருந்தார். அப்பேது, ஜாதி வாரி கணக்கெடுப்பு பற்றி ஒரு வார்த்தை அவர் பேசவில்லை. 

 ராகுலின் ஜாதி அரசியல் புதிய தந்திரம். மிஸ் இந்தியா போட்டிக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் சமூக ஊடகங்களில் இது போன்ற விஷயங்களைச் சொல்கிறார். ஏனெனில் அது தலைப்புச் செய்தியாகிறது. அதற்காகவே அவர் திட்டமிட்டு இதை செய்கிறார். 

 இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க