tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூன் 18–

 வன்னிய பெருமக்களுக்கு கலைஞர் செய்ததைப் போல யாரும் செய்ததில்லை. 1000 ராமதாஸ் வந்து சொன்­னாலும் வன்­னியப் பெரு­மக்கள் வாக்கு தி.முக..வுக்குத் தான் என்று அமைப்புச் செய­லாளர் ஆர்.எ­ஸ்.பாரதி கூறி­னார்.

 

 சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்ற செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறி­ய­தா­வ­து: 

  'தான் திருடி பிறரை நம்பாள்' என்ற பழமொழி போல உள்ளது அதிமுக புறக்கணிப்பு, அதிமுக ஆட்சியில் செய்ததை இன்று மக்கள் மறந்ததாக நினைக்கிறார்கள். . இந்தியாவில் வாக்­குச்­சா­வ­டியை கைப்­பற்­றுதல் என்ற ஒரு விஷயம் தமிழ்நாட்டில் தெரியாமல் இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் ஜெய­ல­லிதா ஆட்சியின் போது தான் பூத் கேப்ச்சரிங் நடந்­தது. அதை அரங்கேற்றியது அதிமுக தான். 

தேர்தல் ஆணையம் இருக்கும்பொழுது ஏன் அதிமுக பயப்படுகிறது? தேர்தல் ஆணையம் யார் கையில் இருக்கிறது? என்பது இந்திய மக்களுக்கு தெரியும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தான் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கலவரமும் இல்லாமல் வாக்குப்பதிவு நடந்தது. ஜனநாயகத்தை காப்பாற்றியது தமிழ்நாடு. ஆனால் அதிமுக எப்படியாவது பாஜ வுடன் செல்ல வேண்டும் என்பதற்காக இதை ஒரு சாக்காக வைத்து சொல்கிறார்கள்.

டெபாசிட் பறிப்பு பயம்

அதிமுக இன்னும் தோல்வியடைவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பல இடங்களில் டெபாசிட் வாங்கவில்லை. இந்த தேர்தலிலும் டெபாசிட் போனால் என்ன ஆகும்? 

ஒரு கட்சி தேர்தலை புறக்கணிக்கிறது என்றால் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் வாக்களிக்கக்கூடாது. நாங்களும் கணக்கெடுக்க போகிறோம். விக்­கி­ர­வாண்டி இடைத்தேர்தலில் யார் யார் வாக்களிக்க போகிறார்கள் என்று. அதிமுக கிளை செயலாளர்கள், கவுன்சிலர்கள் ஓட்டு போட்டார்கள் என்றால் அவர்கள் அனைவரும் எடப்பாடியை புறக்கணித்து விட்டார்கள் என்று அர்த்தம்.

 

 தேர்தலை புறக்கணி என்று கட்சியில் சொல்லிவிட்டு, அந்த தொகுதி அதிமுகவினர் யாரேனும் வாக்களித்தால் உங்களை அதிமுகவிலிருந்து நீக்கிவிடுவோம் என்று சொல்ல எடப்பாடி தயாரா? அண்டர் கிரவுண்ட் டீலிங் வைக்கலாம் என்று பார்க்கிறார்கள். மேலும், வன்னிய பெருமக்களுக்கு கலைஞர் செய்ததைப் போல யாரும் செய்ததில்லை. 20 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்தது கலைஞர் .அதன் மூலம் எத்தனை வன்னியர்கள் மருத்துவர்கள் ஆனார்கள் எத்தனை நபர்கள் இன்ஜினியர், ஐஏஎஸ் ஆனார்கள் இவை அனைத்தையும் அந்த மக்கள் மறந்து விட மாட்டார்கள். 

தமிழ்நாட்டுப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் கொடுத்து வருகிறார். அது மக்களிடத்தில் சென்றுள்ளதால் தான் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றது. இந்த இடைத்தேர்தலிலும் வன்னிய பெருமக்கள் மனசாட்சி உள்ளவர்கள். நல்லவர்கள். ஆயிரம் ராமதாஸ் வந்து சொன்னாலும், நல் இதயம் படைத்த வன்னியர்கள் அனைவரும் திமுக கூட்டணிக்கு தான் வாக்களிப்பார்கள். பாமகவை கை கழுவி விட்டார்கள். அவர்கள் சின்னமே போய்விட்டது. கடந்த தேர்தலில் ஒரு சின்னத்திற்கு வாக்கு கேட்டு விட்டு தற்போது ஒரு சின்னத்திற்கு வாக்கு கேட்டால் அந்த தொகுதி மக்கள் உங்களை மதிப்பார்களா? 

இவ்­வாறு அவர் கூறினார்.

++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க