tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

விழுப்புரம், ஜூலை 29–

பா.ம.க. இரண்டு எம்.எல்.ஏ. சீட் கூட ஜெயிக்க முடியாது என்று அன்புமணிக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார்.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: 

வருகிற 2026 சட்டசபைத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதல்வர் தெரிவித்தார். ஆனால் 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம். 

 மத்தியில் ஆட்சி நடத்துகிற பா.ஜ., அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து இருக்கிறது. தமிழகம் என்கின்ற பெயர் சொல்வது கூட அவர்களுக்கு மனம் இல்லை. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விழுப்புரம் ரயில்வே பள்ளியில் படித்தவர், இவர் தமிழகத்தின் பெயரை சொல்வதற்கு கூட அவர்களுக்கு திறன் இல்லை. பாஜ அரசு தமிழகத்தை எந்த அளவில் புறக்கணிக்கிறது என்பது இதில் இருந்தே தெரிகிறது. அந்த அரசுக்கு நாம் பாட புகட்ட வேண்டும். இன்னும் சில பேர்(அன்புமணி) 25 எம்பி சீட் எங்களுக்கு (பா.ம.க., பா.ஜ. அணிக்கு) கொடுத்திருந்தால் பட்ஜெட்டில் தமிழ்நாடு வந்திருக்கும்.. நாங்களும் என்ன வேண்டுமானாலும் பண்ணி இருப்போம் என கூறுகிறார்கள். இனி 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமில்லை... இரண்டு சட்டமன்றத் தொகுதி கூட ஜெயிக்க முடியாது. 

இந்தியா கூட்டணியின் வழிகாட்டியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார், நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என முதன் முதலில் தெரிவித்த ஸ்டாலினை பின்பற்றி 9 மாநில முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கும், 2026ல் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் சேர்த்து பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு பொன்முடி பேசினார்.

++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க